Advertisement
சமூகம்செய்திகள்தகவல்

E – pass மற்றும் E – பதிவு என்ன வித்தியாசம்? யார் எதைப் பெற வேண்டும்?

தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி யாரெல்லாம் இ-பாஸ் அல்லது இ-பதிவு பெற வேண்டும் என்பது பற்றிய விளக்கத்தை இப்பதிவில் காண்போம்.

என்ன வித்தியாசம்?

Advertisement

இ-பாஸ்: தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை https://eregister.tnega.org/#/user/pass என்ற வலை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிறகு ஆவணங்கள் மற்றும் காரணங்கள் சரிபார்தலுக்கு பிறகு இ-பாஸ் தரப்படும். அதை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு பயணம் செய்யலாம்.

இ-பதிவு: மேற்கூறிய அதே வலை தளத்தில் அதே வழிமுறையை பின்பற்றி விவரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இ-பதிவிற்கு இதுவே போதுமானது ஆகும்.

யார் பெற வேண்டும்?

தமிழ் நாட்டுக்கு வெளியில் இருந்து அதாவது வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டிற்குள் அதாவது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்கள் இ-பதிவு செய்திருந்தால் போதுமானது என்றும் கூறியுள்ளது.

இவ்வாறு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.