Advertisement
முக்கிய செய்திகள்
Trending

தமிழகத்தில் ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர்

தமிழகத்தில் மேலும் ஒரு வார தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு நீட்டிப்பு 24-ம் தேதி முதல் நடைமுறையை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு ஜூன் 7-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:

Advertisement
  • மருத்துவ தேவைகளுக்காக மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் செல்ல இ-பாஸ் தேவை இல்லை.
  • உணவகங்கள் பார்சல் மற்றும் ஆன்லைன் டெலிவரி அனுமதி (நேர கட்டுபாட்டுடன்).
  • பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்.
  • ஏ.டி.எம். மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
  • வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
  • சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.
  • வங்கி, இன்சூரன்ஸ் கம்பனி பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும்.
  • நகர்புறம் மற்றும் கிராமங்களில் நடமாடும் காய்கறி கடைகள் செயல்படுத்தபடும்.
  • மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் இயங்க அனுமதி.
  • உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அனுமதிக்கப்படும்.
  • பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்.
  • பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத்துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.
  • தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத்துறைகள் மட்டும் இயங்கும்.
  • உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. (Swiggy, Zomato) போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.