Advertisement
ஒலிம்பிக்ஸ்

திருநங்கைகள் விளையாட அனுமதிக்கப்பட்டது முதல் பார்வையாளர்களுக்கு தடை வரை டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள்

ஜூலை மாதம் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கின்றன. இது கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் உலகம் முழுவதும் அதிகரித்ததால் ஒரு வருடம் தாமதமானது. முக்கியமாக வீரர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, டோக்கியோ ஒலிம்பிக்கின் அமைப்பாளர்கள் அணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளனர். இதுதவிர, நீண்ட காலத்திற்கு விளையாட்டு வீரர்களுக்கு உதவ பல ஆச்சரியமான விதிகளையும் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பற்றிய ஆச்சரியமான சில உண்மைகள் இங்கே:

Advertisement

திருநங்கைகள் விளையாட அனுமதி

ஒலிம்பிக் தளம் மாற்றத்தின் முக்கிய புள்ளியாக இருக்க வேண்டும், திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை நிலைநிறுத்த விளையாட்டு வீரர்கள் தங்கள் குரலை மாற்றத்திற்காகப் பயன்படுத்த வேண்டும். “விளையாட்டில், நாங்கள் அனைவரும் சமம்” என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் டோக்கியோவின் பிரைட் ஹவுஸ் திறப்பு விழாவில் கூறினார். ஒலிம்பிக் குழு திருநங்கைகள் விளையாடுவதற்கு அனுமதி அளித்துள்ளது.

அனைத்து விளையாட்டு வீரர்களும், அவர்களின் பாலின அடையாளம் அல்லது பாலின குணாதிசயங்களைப் பொருட்படுத்தாமல் பாதுகாப்பான மற்றும் நியாயமான போட்டியில் ஈடுபட வேண்டும் என்பதையும் அங்கீகரிக்கிறது. எனவே திருநங்கைகளுக்கு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க கதவுகளைத் திறந்துள்ளனர். நியூசிலாந்தின் 43 வயதான பளுதூக்குபவர் லாரல் ஹப்பார்ட் ஒலிம்பிக்கில் போட்டியிடும் முதல் திருநங்கை தடகள வீரர் ஆவார்.

Supermom: விளையாட்டு வீராங்கனைகள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான அமைப்பாளர்கள், தாய்ப்பால் கொடுக்கும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு, தங்கள் குழந்தைகளை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு அழைத்து வர அனுமதித்துள்ளனர். யு.எஸ். மராத்தான் வீரர் அலிஃபின் துலியாமு டோக்கியோ அமைப்பாளர்களிடம் தங்கள் குழந்தைகளை ஜப்பானுக்கு அனுமதிக்குமாறு பகிரங்கமாக கேட்டு கொண்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கொள்கை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற பல விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஓரளவு நிம்மதியைத் தருகிறது. அமெரிக்க மராத்தான் வீரர் அலிஃபின் துலியாமுக், அவருக்கு ஜனவரி மாதம் தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது; கனடிய கூடைப்பந்து வீரர் கிம் கௌச்சர், அவரது மகள் மார்ச் மாதம் பிறந்தார்; மற்றும் யு.எஸ். கால்பந்து வீரர் அலெக்ஸ் மோர்கன், மகள் மே 2020 இல் பிறந்தார்.

ஆணுறைகள்!

டோக்கியோ ஒலிம்பிக்கின் அமைப்பாளர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு சுமார் 1.6 லட்சம் ஆணுறைகளை விநியோகிப்பார்கள். இதற்கு ஒரு நிபந்தனையும் இருக்கிறது! ஒவ்வொரு முறையும் போலல்லாமல், விளையாட்டு வீரர்கள் அந்த ஆணுறைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவற்றை ‘நினைவு பரிசுகளாக’ வீட்டிற்கு எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுவார்கள். விளையாட்டு வீரர்கள் அங்கு தங்கியிருக்கும் போது ஆணுறைகளைப் பெற மாட்டார்கள், ஆனால் அவர்கள் புறப்படும் போது விநியோகிக்கப்படும். கோவிட் -19 நிலைமை குறித்து இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது.

மது அருந்த தடை

டோக்கியோ ஒலிம்பிக்கின் அமைப்பாளர்கள் விளையாட்டுகளில் மதுவை தடை செய்துள்ளனர். ஒலிம்பிக் நிகழ்வை நடத்துவதால் ஏற்படும் நோய் தொற்று அபாயம் குறித்து ஜப்பானிய பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. டோக்கியோ மற்றும் பல பகுதிகள் நீண்டகால ஊரடங்கு நிலையில் இருந்து வெளிவந்துள்ளன, அந்த நேரத்தில் வைரஸ் கட்டுப்பாட்டாக மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. டோக்கியோ 2020 இன் தலைவர் சீகோ ஹாஷிமோடோ, இந்த குழு நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, ஒலிம்பிக் அரங்குகளில் “தொற்று விரிவடைவதைத் தடுக்க” மது விற்பனை மற்றும் நுகர்வு தடை செய்ய முடிவு செய்துள்ளது என்றார்.

பார்வையாளர்களுக்கு தடை

இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் அமைப்பாளர்கள் அனைத்து சர்வதேச பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள தடை விதித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களிலிருந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஒலிம்பிக் அமைப்பாளர்கள் கூறியதாவது “இந்த முடிவு பங்கேற்பாளர்கள் மற்றும் ஜப்பானிய பொதுமக்கள் என அனைவரது நலன் மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும்.”

ஒலிம்பிக் பதக்கமும் மறுசுழற்சியும்

டோக்கியோ 2020 மறுசுழற்சி செய்யப்பட்ட மொபைல் போன்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வழங்க இருக்கிறது. டோக்கியோ 2020 ற்கு தேவையான தலா 5,000 தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை உருவாக்க ஜப்பான் முழுவதிலும் இருந்து சிறிய மின்னணு சாதனங்களை சேகரித்தது. பழைய அல்லது தேவையற்ற தொலைபேசிகளை நன்கொடையாக வழங்குமாறு பொதுமக்களைக் கேட்டு, பிப்ரவரி 2017 இல் மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொலைபேசிகளிலிருந்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் பிரித்தெடுக்கப்பட்டு பதக்கங்களை உருவாக்குவதாக அமைப்பாளர்கள் முதலில் அறிவித்திருந்தனர். , வான்கூவர் 2010 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளிலும் இதே முறை பயன்படுத்தப்பட்டது.

தனிமையில் உணவு

அமைப்பாளர்கள் முதலில் ஒரே நேரத்தில் 4,500 பேர் அமரக்கூடிய திறன் கொண்ட மிகப்பெரிய பரந்த சாப்பாட்டு அரங்குகளில் உணவளிக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது, அமைப்பாளர்கள் விளையாட்டு வீரர்களை தனியாக உணவருந்தவும், மற்றவர்களுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், சாப்பிட்ட பிறகு மேற்பரப்புகளைத் துடைக்கவும் கேட்டுள்ளனர்.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.