Advertisement
சினிமா

இயக்குனர் அவதாரத்தை கலைத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் | ‘அதிகாரம்’ ஒரு பான் இந்தியா படம்

தொடர்ச்சியாக காஞ்சனா -வின் அடுத்தடுத்த பாகங்களில் கவனம் செலுத்திய ராகவா லாரன்ஸ் தற்போது மற்ற இயக்குனர்களுடனும் கதை கேட்டு கதாநாயகனாக நடிக்க உள்ளார். அது மட்டுமின்றி ஒரு பான் இந்தியா (Pan india) திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

பான் இந்தியா படம் என்றால் என்ன ?

இந்தியாவில் ஒரு மாநிலத்தில் வெளியாகும் ஒரு படம் அம்மாநிலத்தின் மொழியைத் தவிர பிற மாநிலங்களின் மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியாகுவதே ‘பான் இந்தியா’ திரைப்படம். அதுமட்டுமின்றி இப்படங்களுக்கான டிஜிட்டல் உரிமம், satellite உரிமம் என வெவ்வேறு பிரிவினில் இருந்து பெரிய அளவில் வசூலும் செய்யும்! இவ்வகையான பான் இந்தியா திரைப்படங்கள் 2018 -ம் ஆண்டு கன்னட திரைப்படமான கே.ஜி.எஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமானது. இப்படத்தினை தொடர்ந்து பல படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி பிரபலமாகியுள்ளது. தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்க்தில் ராம் சரண், ஜூனியர் NTR நடித்து வெளியாக உள்ள ‘RRR’ திரைப்படமும் பான் இந்தியா திரைப்படம் ஆகும், இப்படத்திற்கு இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

Advertisement

லாரன்ஸ் – ன் அடுத்தடுத்த படங்கள்

நடிகர் தனுஷ் நடித்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆடுகளம்’ திரைப்படத்தை தயாரித்த ‘5 ஸ்டார் கிரியேஷன் LLP’ என்ற தயாரிப்பு நிறுவனம் ராகவா லாரன்ஸ் -ன் ‘ருத்ரன்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது இப்படத்திற்கு இதுவரை இயக்குனர் யாரென்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை, இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், சரத்குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அடுத்ததாக, இயக்குனர் P. வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ நடிப்பில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியடைந்த ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். இப்படத்தை ஏற்கனவே தனது வெற்றி படங்களான ‘ காஞ்சனா ‘ படங்களை வெளியிட்ட ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த அறிவிப்பை ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டே தெரிவித்திருந்தார். கொரோனா ஊரடங்கால் இதுவரை படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.

ராகவா லாரன்ஸின் ‘அதிகாரம்’

கடந்த 25.06.2021 வெள்ளியன்று ‘5 ஸ்டார் கிரியேஷன் LLP’ தயாரிப்பு நிறுவனம், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டது. அதில், நாங்கள் இயக்குனர் வெற்றிமாறன் -ன் ‘ Grass root film corporation ‘ நிறுவனத்தோடு இணைந்து அடுத்து தயாரிக்கவுள்ளது ஒரு பான் இந்தியா திரைப்படம் என்று தெறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம், மற்றும் இப்படத்தின் பெயர் ‘அதிகாரம்’ என்றும் கூறி இந்த அறிவிப்பை இப்படத்தின் first look poster உடன் வெளியிட்டனர். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ‘தமிழ் வேல்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தின் கதையை எழுத, எதிர்நீச்சல், கொடி, பட்டாஸ், போன்ற படங்களை இயக்கிய ‘துரை செந்தில்குமார்’ இப்படத்தை இயக்குகிறார்.

இப்படம் தமிழில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வெளியாக உள்ளது. இதனால் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.