Advertisement
கொரோனாசெய்திகள்

இ-பதிவு முறை: குழப்பத்தில் மக்கள் – இனி திருமணத்திற்கு போக முடியாதாம்.

இ – பதிவு முறையில் மாற்றம்: திருமணம், இறப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த பயணத்திற்கு இ – பதிவு கட்டாயம் என அறிவித்து இருந்தது தமிழக அரசு. தற்போது இ – பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளதால் இறப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த பயணங்களுக்கான அனுமதி மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

பதிவு செய்வதில் திருமணம் என்ற தெரிவு நீக்கப்பட்டதற்கு தற்போது தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

வெளியில் பயணம் செய்வதற்கு அதிகப்படியான மக்கள் தேர்ந்தெடுக்கும் தெரிவு திருமணம் ஆகும். இதனால் அதிகப்படியான மக்கள் வெளியில் நடமாடுவதால் நோய் தொற்று பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்த தெரிவில் பலர் தவறான தகவல்களை கொடுப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய காரணங்களால் இ-பதிவு முறையில் திருமணம் என்ற தெரிவு நீக்கம் செய்யப்பட்டதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இவ்வாறு ஒரு சிலர் செய்வதால் உண்மையில் திருமணம் சார்ந்த வேலைகளுக்கு வெளியில் செல்பவர்களுக்கும் தற்போது சிக்கல் நேர்ந்துள்ளது.

வெளியில் தேவையில்லாமல் சுற்றுவதால் நோய் தொற்று அதிகரிக்கின்றது என்பதால் தான் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் மே 24 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு கொரோனா பரவல் குறையாமல் இருந்தால் ஊரடங்கை நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தொற்றால் வரும் பாதிப்புகள் அந்தந்த நபர் சார்ந்த குடும்பங்களை கடுமையாக பாதிக்கிறது. அதே அளவு பாதிப்புகள் ஊரடங்கால் பொருளாதார ரீதியில் அனைவரும் சந்திக்க நேரிடுகிறது. இதனால் ஒவ்வொருவரும் தீவிரத்தை உணர்ந்து அவசர அவசியம் இன்றி வெளியில் சுற்றுவதை தவிர்த்து தங்களையும் பிறரையும் காத்துக் கொள்ளவும்.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.