சன் டிவியில் நேரடியாக வெளியாக இருக்கும் திரிஷாவின் “ராங்கி”
தமிழ் சினிமாவில் early 2k kids -க்கான கனவு தேவதையாக வளம் வந்த த்ரிஷா, கடந்த 2018 – ஆம் ஆண்டில் வெளிவந்த ’96’ திரைப்படம் மூலம் இப்போது உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் ‘காதல் தேவதையாக’ ரீ என்ட்ரி கொடுத்தார்.
அதன் பிறகு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினி -யின் ‘பேட்ட’ படத்திலும் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார், அடுத்ததாக 2020 -ஆம் ஆண்டே த்ரிஷா நடித்து வெளிவர இருந்த தனது 60 – வது படமான ‘பரமபத விளையாட்டு’ திரைப்படம் திரையரங்குகள் மூடப்பட்ட காரணத்தினால் படம் வெளியாகுவதில் சிக்கலாகவே இருந்தது, இதனால் படக்குழுவினர் படத்தை Disney+Hotstar ல் தமிழ் புத்தாண்டை யொட்டி கடந்த ஏப்ரல் மாதம் 14 -ஆம் தேதியன்று Disney+hotstar -ல் படத்தை வெளியிட்டனர். ஆனால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை !
அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் கதையில், எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி போன்ற வெற்றி படங்களை இயக்கிய எம். சரவணன் இயக்கத்தில் ஒரு action திரில்லர் ஆக ‘ராங்கி’ என்ற திரைப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படமும் திரையரங்கில் வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ‘ராங்கி’ படக்குழுவினர் ‘சன் டிவி’ யிடம் இப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, ஏற்கனவே சன் எண்டர்டெய்ன்மண்ட் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்த ‘புலிக்குத்தி பாண்டி’ படம் சன் டிவி -ல் நேரடி ஒளிபரப்பாகி மிகப் பெரிய TRP -யை பெற்றது.
தற்போது த்ரிஷா -வின் ‘ராங்கி’ திரைப்படம் சன் டிவி -யில் நேரடி ஒளிபரப்பாக உள்ளதாக கிடைத்த இந்த அதிகாரப்பூர்வமற்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read also: சன் டிவி 75 கோடிக்கு சிவகார்த்திகேயனுடன் ஒப்பந்தம், 2 ஆண்டுகளில் 5 படங்கள் நடிக்க இருக்கிறார்