சன் டிவி 75 கோடிக்கு சிவகார்த்திகேயனுடன் ஒப்பந்தம், 2 ஆண்டுகளில் 5 படங்கள் நடிக்க இருக்கிறார்
தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் இதுவரை 14 படங்களில் கதாநாயகனாக நடித்து குழந்தைகள் மற்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வெற்றிபெற்றுள்ளார்.
இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் தனியாக SK Production – எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். கனா, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, அடுத்து வெளியாகவுள்ள டாக்டர், டான் போன்ற படங்களையும் இவர் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் இடையில் இவர் முன்னதாக நடித்து கொடுத்த படங்களில் திட்டமிட்ட பட்ஜெட் -க்கும் அதிகமாக செலவானதையடுத்து தயாரிப்பாளர்கள் கொடுக்க வேண்டிய கடனை, சிவகார்த்திகேயன் தானே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
இந்த கடனை ஈடுகட்டும் வகையில், சன் பிக்சர்ஸ் இடம் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து 2 வருடத்தில் 5 படங்கள் நடித்து தருவதாகவும், ஒரு படத்திற்கு 15₹ கோடி என சம்பளம் நிர்ணயம் செய்து, 5 படத்திற்கு 75₹ கோடி என தற்போது சன் நெட்வொர்க் இடம் இந்த ஒப்பந்தத்தை போட்டுள்ளார்.
ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த “நம்ம வீட்டு பிள்ளை” படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது, இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணியில் 5 படம் உருவாக இருக்கும் நிலையில் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.