Advertisement
கொரோனாதமிழ்நாடுமுக்கிய செய்திகள்
Trending

தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – முதலமைச்சர்

கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 07-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வர இருந்த நிலையில், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 07-06-2021 முதல் 14-06-2021 காலை 6 மணி வரை, சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு நீட்டிப்பு காலத்தின்போது, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

Advertisement

தொற்று குறையாத 11 மாவட்டங்கள்

தமிழ் நாட்டில் தற்போது கொரோனா தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே, இம்மாவட்டங்களில் கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் 7-6-2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

11 மாவட்டங்களுக்கான தளர்வுகள்

• தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

• காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.

• மீன் சந்தைகள் மொத்த விற்பனைகளுக்கு மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

• இறைச்சிக் கூடங்கள் (Slaughter houses) மொத்த விற்பனைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

• அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

• சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதி.

• தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

பிற மாவட்டங்களின் நிலை

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களுக்கான தளர்வுகள்

• தனியாக செயல்படுகின்ற மளிகை. பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

• காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

• மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி. மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

• இறைச்சிக் கூடங்கள் (Slaughter houses) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி.

• தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

• அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

• சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

• தனியார் பாதுகாப்பு அலுவலகம், சேவை நிறுவனங்கள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

• மின் பணியாளர் (Electricians) பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

• மின் பொருட்கள் (electrical goods), பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

• மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

• ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

• வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

• கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

• வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

• டேக்ஸிகள், வாடகை வாகனங்கள், ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.

பொதுவான அனுமதிகள்

• நீலகிரி மாவட்டம், கொடக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

• கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் 10 சதவிகிதம் பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.