கொரோனாசெய்திகள்தமிழ்நாடுமுக்கிய செய்திகள்
தமிழகத்தில் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு- முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் மே 10 முதல் மே 24 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தது. மே 24 முதல் இம்மாத இறுதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை ஏற்கனவே அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது மீண்டும் ஒரு வாரத்திற்கு, ஜூன் 7 ம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
- காய்கறி, மளிகை பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து தள்ளு வண்டியில் விற்க அனுமதி
- ஜூன் மாதம் முதல் ரேசன் கடைகளில் 13 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும்.
- ஆன்லைன் அல்லது தொலைபேசி வாயிலாக கேட்கும் பொருட்களை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விநியோகம் செய்துகொள்ளலாம்.
- ஏற்கனவே அறிவித்திருந்த அனைத்து விதிகளும் தொடர்ந்து அமலில் இருக்கும்
#COVID19 பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்காக ஜூன் 7 வரை #Lockdown நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடமாடும் காய்கறி விற்பனை தொடரும்; மளிகைப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்கலாம்; நியாய விலைக் கடைகளிலும் மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும்!
மக்களின் முழு ஒத்துழைப்பு வேண்டும்! pic.twitter.com/yzXmXBSjvEAdvertisement— M.K.Stalin (@mkstalin) May 28, 2021