Viral Video: தோசைக் கல் இல்லைன்னா என்ன இப்போ குக்கரில் கூட சப்பாத்தி சுடலாம்
சமூக ஊடகங்களில் வைரலாக வளம் வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் பிரஷர் குக்கரின் உதவியுடன் சப்பாத்திகளை தனித்துவமான பாணியில் சமைத்து காட்டுகிறார்.
சப்பாத்தி என்பது பெரும்பாலான இந்திய வீடுகளில் தயாரிக்கப்படும் ஒரு பொதுவான உணவு. சப்பாத்தி செய்ய தோசைக் கல், மாவை உருட்ட ஒரு பலகை மற்றும் கட்டை தேவை. ஆனால் சமீபத்தில் ஒரு பெண் தோசைக் கல் இல்லாவிட்டாலும் ஒரு சரியான சப்பாத்தியை எவ்வாறு சமைக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளார்.
வைரல் கிளிப்பில், ஒரு பெண் தனது சமையலறையில் அடுப்பை ஏற்றி, அதில் ஒரு வெற்று பிரஷர் குக்கரை வைப்பதைக் காணலாம். அவர் குக்கரை அதிக சுடரில் வைக்கிறார். அந்த பெண் சப்பாத்தி கட்டை உதவியுடன் மூன்று சப்பாத்திகளை உருட்டிக் கொள்கிறார். உருட்டப்பட்ட மூன்று சப்பாத்திகளையும் பிரஷர் குக்கருக்குள் ஒன்றன் பின் ஒன்றாக வைக்கிறார். அவர் மூடியை இறுக்கமாக மூடி, பார்வையாளர்களை 2 நிமிடங்கள் காத்திருக்குமாறு கூறுகிறார்.
சிறிது நேரம் கழித்து பிரஷர் குக்கரின் மூடியைத் திறக்கிறார். பின்னர் அவர் பாத்திரத்தில் இருந்து சமைத்த சப்பாத்தியை ஒரு ஸ்கிம்மரின் உதவியுடன் ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து சுத்தமான தட்டில் வைத்து பார்வையாளர்களுக்கு எவ்வளவு சரியாக சமைத்திருக்கிறார் என்பதைக் காண்பிக்கிறார்.
இந்த சமையல் குறிப்பு நிச்சயம் பலரது சமையல் அறையில் பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆச்சரியப்படும் விதமாக, இது தனித்துவமான ஒன்று அல்ல. யூடியூபில் ‘chapathi in a pressure cooker’ என்று ஒருவர் தேடும்போது, நிறைய வீடியோக்கள் கிடைக்கின்றன.