யூனியன் பிரதேசத்தில் அரசியல் செயல்முறைகளை வலுப்படுத்த புதுடில்லியில் ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அழைத்து பேசியள்ளார். நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் இந்தியாவின் கொள்கைகள் எவ்வாறு மாறியது என்பதை இந்த பதிவில் காணலாம்.
அரசியலில், ஜம்மு-காஷ்மீர் என்பது எப்பொழுதும் ஒரு தீர்க்க முடியாத சிக்கலான பிரச்சினை. ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை என்று பொதுவாக குறிப்பிடப்படுவதற்கு முக்கிய காரணம் 1947 இல் இந்தியா மற்றும் பாகிஸ்தானை பிரிட்டிஷ் வடிவமைத்ததன் விளைவாகும்.
சுதந்திர இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் (லடாக் யூனியன் பிரதேசத்தையும் உள்ளடக்கியது) இந்திய யூனியனுடன் இணைக்க முடிவு செய்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு பாக்கிஸ்தான் காஷ்மீர் மீது படையெடுத்தது. இரு படைகளையும் பிரிக்கும் போர்நிறுத்தக் கோடுடன் போர் முடிந்தது. இந்த Line of control (LoC) ஆனது ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றின் பெரும் பகுதியை பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பின் கீழ் வைத்தது.
இருப்பினும், ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக கட்டுப்பாடு என்பது ஒரு நிலையானதாக இருக்கவில்லை. 1950 மற்றும் 1960 களில், சீனா நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு அக்சாய் சினைக் கைப்பற்றியது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் மீதான இந்தியாவின் கூற்றை மீண்டும் வலியுறுத்தி அடுத்தடுத்த அரசாங்கங்கள் நிலைமையைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தன. 1990 களில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை திரும்பப் பெறுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தும் தீர்மானத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியது.
நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கை
ஆகஸ்ட் 2014: அதிகாரத்திற்கு வந்த இரண்டரை மாதங்களுக்கு பிறகு இந்தியா, பாக்கிஸ்தான் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. ஆனால் டெல்லியில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை பாக்கிஸ்தான் உயர் அதிகாரிகள் சந்தித்தால் மோடி அரசாங்கம் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நிறுத்தி பாகிஸ்தானை திகைக்க வைத்தது. முந்தைய அணுகுமுறையிலிருந்து இது ஒரு கூர்மையான திருப்பமுனை. இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதாக மோடி அரசு குற்றம் சாட்டியது.
ஜம்மு & காஷ்மீர் அரசு: 2015-2016
2014 இல் நடைபெற்ற தேர்தல் ஒரு தொங்கு சட்டசபையை அமைந்தது. கொள்கைகளில் வேறுபட்ட மக்கள் ஜனநாயகக் கட்சி (PDP) மற்றும் பாரதிய ஜனதா (BJP) ஆகியவை இணைந்து ஆட்சி அமைத்தன. முப்தி முஹம்மது சயீத் முதல்வரானார். அவர் 2016 ஜனவரியில் இறந்தார்.
இவரது மகள் மெஹபூபா முப்தி ஏப்ரல் 2016 இல் முதல்வரானார்.
ஜூலை 2016
பயங்கரவாத அமைப்பு ஹிஸ்புல் முஜாஹிதீனின் தளபதி புர்ஹான் வாணி பாதுகாப்பு படையினருடனான மோதலில் கொல்லப்பட்டார். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன, பாதுகாப்பு படையினருடன் வன்முறையில் ஈடுபட்டதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பலர் இறந்தனர். 50 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது.
செப்டம்பர் 2016
யூரி இராணுவ தளத்தை பயங்கரவாதிகள் தாக்கியதில் 18 வீரர்கள் இறந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா எல்லை கட்டுப்பாட்டு கோடு முழுவதும் Surgical Strike தாக்குதல்களை நடத்தியது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பொதுவெளியில் வந்தது.
மெஹபூபா அரசாங்கத்தின் வீழ்ச்சி
ஜூன் 2018 இல், பாஜக மெஹபூபா முப்தி அரசாங்கத்திலிருந்து வெளியேறியது. மெஹபூபா காஷ்மீரில் பிரச்சனையை உருவாக்குபவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிது. முந்தைய அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்ட அந்தஸ்தான ‘சமரசக் கொள்கைக்கு’ எதிராக காஷ்மீரில் ஒரு ‘இசைவுக் கொள்கையை’ கடைப்பிடிப்பதாக மோடி அரசு குற்றம் சாட்டியது.
பிரிவினைவாதிகள் மீதான அணுகுமுறையில் மாற்றம் 2016-2019
காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிரான கொள்கையில் மோடி அரசு நுட்பமான மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வெளிப்படையாக இந்திய விரோத கருத்துக்களை பரப்பினர், ஆனால் அவர்கள் அரசாங்கத்திடமிருந்து அனைத்து சலுகைகளையும் அனுபவித்தனர். இது கேள்விக்குறியாகவே இருந்தது. இதனால் 2019 ஆம் ஆண்டில், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நிதி உதவி படிப்படியாக திரும்பப் பெறப்பட்டது. மேலும் பயங்கரவாத நிதியுதவிக்கான அவர்களின் தொடர்புகளும் ஆராயப்பட்டன.
பிப்ரவரி 2019: புல்வாமா தாக்குதல் மற்றும் பாலகோட் தாக்குதல்
2019 பிப்ரவரி 14 ம் தேதி, காஷ்மீரில் புல்வாமாவை சார்ந்த பாதுகாப்புப் படையினர் 40 வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மோடி அரசாங்கம் பாக்கிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இருந்த ஒரு பயங்கரவாத முகாமை வான்வழியாக தாக்கி அழித்தது. இது 2016 ஆம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் நினைவூட்டலில் மோடி அரசாங்கம் பதிலளித்தது.
ஆகஸ்ட் 2019: காஷ்மீர் 370 வது பிரிவு
மோடி அரசு 370 வது பிரிவை நீக்கும் மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றியது. பிரிவு 370 க்கு என்று ஒரு வரலாறு இருந்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு யூனியன் பிரதேசம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த முடிவு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறித்தது. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மோடி அரசு கொண்டு வந்தது, இது லடாக்கை ஜம்மு-காஷ்மீரில் இருந்து பிரித்தது. இரண்டு பிரிவுகளும் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இந்தியாவில் ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது இதுவே முதல் முறை. முன்னாள் முதலமைச்சர்கள் பாரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா மற்றும் பிடிபி தலைவர் மெஹபூபா முப்தி உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். பிரிவினைவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இப்போது என்ன நடக்கிறது?
பிரதமர் நரேந்திர மோடி புது தில்லியில் ஜம்மு-காஷ்மீர் தலைவர்களின் கூட்டத்தை, யூனியன் பிரதேசத்தில் அரசியல் செயல்முறைகளை வலுப்படுத்த அழைத்தார். இதில் கலந்துகொள்பவர்கள் பெரும்பாலும் ஜம்மு-காஷ்மீரின் ஆகஸ்ட் 2019 க்கு முந்தைய நிலையை மீட்டெடுக்க அழைப்பு விடுக்கும் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை (பிஏஜிடி) உருவாக்கிய தலைவர்கள் ஆவார்கள். நிலைமை சாதகமானவுடன் ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதை நோக்கமாகக் கொண்டதாக மோடி அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீர் தலைவர்களுடனான பிரதமர் மோடியின் உரையாடல் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.