World No Tobacco Day: இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள்! கைவிட்டால் கைவிடப்படமாட்டாய்!

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அளவில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.

புகையிலையால் ஏற்படும் பாதிப்புக்கள்:

புகையிலையை பயன்படுத்தும் முறையையும், அளவையும் பொறுத்து மனித உடலில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதனைப் பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய முக்கியமான உடல்நலக் கேடு குருதிச் சுற்றோட்டத்தொகுதியில் ஏற்படக்கூடிய நோய்கள் ஆகும். புகைத்தல் காலப்போக்கில், வாய், தொண்டை, நுரையீரல் ஆகிய பகுதிகளில் பெருமளவு புற்று நோயைத் தூண்டும் பொருட்களைப் படியச் செய்கிறது.

உலக அளவில் தவிர்க்கக் கூடிய மரணங்கள் நிகழ்வதற்கு புகையிலை ஒரு முன்னணிக் காரணியாக விளங்குகிறது. ஒரு சிகரட் புகைக்கப்படும் போது தோராயமாக ஒருவர் தன் ஆயுட்காலத்தின் 11 நிமிடங்களை இழக்கின்றார். ஒவ்வொரு 6 நொடிப்பொழுதிலும் உலகில் ஒரு உயிரழப்பு புகையிலையால் ஏற்படுகிறது.
புகைப்பழக்கம் உடையவர்கள் இயல்பான இறப்பு விகிதத்தைக் காட்டிலும் 60-80% அதிகம்.
ஒருவருடத்திற்கு சுமார் 50 லட்சம் மக்கள் புகையிலை சார்ந்த நோயால் மடிகின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புகைபிடிப்பவர்களில் 50 சதவீதம் பேர் புகைபிடிக்காதவர்களை விட COVID-19 ஆல் பாதிக்கும் அபாயத்தில் உள்ளனர். “எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது கொரோனா வைரஸ் தாக்கும் அபாயத்தை குறைக்க செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம், அத்துடன் புற்றுநோய்கள், இதய நோய்கள் மற்றும் சுவாச நோய்கள் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும்” என்று WHO தனது அறிக்கையில் கூறியுள்ளது.

WHO விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்த ஆண்டு இந்த சிறப்பு நாளின் கருப்பொருளாக “கைவிடுவதாக உறுதி கொள்” (Commit to Quit) என்பதை வைத்துள்ளது.

Exit mobile version