இன்று தமிழ் இளைய தளபதி விஜய்யின் பிறந்த நாள், இந்த சிறப்பு தினத்தை கொண்டாட, அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் வாழ்த்துக்களை சமூக ஊடக தளங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர். விஜய்யின் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் பீஸ்ட். விஜயின் பிறந்த நாளான இன்று ஜுன் 22 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.
திங்கள்கிழமை மாலை தயாரிப்பாளர்கள், விஜய் ஆக்ரோஷமாக தனது கையில் துப்பாக்கியை வைத்திருக்கும் முதல் போஸ்ட்டரை வெளியிட்டனர், நள்ளிரவில் வெளியிடப்பட்ட இரண்டாவது போஸ்டர், புருவத்தை உயர்த்தி பார்க்க வைத்தது. பீஸ்ட் படத்தை நெல்சன் திலிப்குமார் எழுதி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு கோலாமா கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய சில பிரபலங்களின் தொகுப்பு:
Read also: சன் டிவியில் நேரடியாக வெளியாக இருக்கும் திரிஷாவின் “ராங்கி”
Read also: காலகேயர் மொழி கத்துக்கலாம் வாங்க – கிலிகி (KiLiKi) ஒரு புதிய மொழி