இயல்பு வாழ்க்கையிலும் சரி, சினிமா வாழ்க்கையிலும் சரி, தன்னை பற்றியும், தான் செய்யும் செயல்கள் பற்றியும் விளம்பரப்படுத்த விரும்பாதவர் தல அஜித் !
இந்த நல்ல உள்ளத்திற்க்கு தமிழ்நாட்டில் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இவர்கள் எந்த நிலையிலும் தங்களது தல அஜித்தை விட்டுக்கொடுக்காமல் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்!
ஆனால் கடந்த 2 வருடமாக அஜீத்தின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். காரணம் தயாரிப்பாளர் போனி கப்பூரின் ‘பே வியூ ப்ராஜக்ட்’ தயாரிப்பில் இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் “தல அஜித்” நடித்து கடந்த 2019 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 – ஆம் தேதி வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’ இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தல அஜித் இரண்டாவது முறையாக ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்து இயக்கிய அதே குழுவுடன் இணைந்து ‘வலிமை’ என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படம் கடந்த 2020 – ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகை நாட்களில் திரையிட முடிவு செய்தனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா ஊரடங்கால் படத்தின் ஒரு சில காட்சிகள் எடுக்க முடியாமல் படம் வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதுவரை படத்திலிருந்து ஒரு update கூட தயாரிப்பாளர் வெளியிடவில்லை. இதனால் படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.
அதன் பின்னர் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் படத்தின் தயாரிப்பாளரிடம் update கேட்க ஆரம்பித்தனர். அதன் விளைவாக தல அஜித் குமாரின் பிறந்த நாளான மே 1 அன்று படத்தின் first look – ஐ வெளியிட போவதாக கூறினார் படத்தின் தயாரப்பாளர் போனி கப்பூர். பிறகு அவரே, இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதி தீவரமாக உருவெடுத்துள்ள நிலையில் வலிமை படத்தின் first look போஸ்டரை வெளியிட்டு கொண்டாடுவது சரி இல்லை என கூறி தேதி குறிப்பிடாமல் update ஐ தள்ளி வைத்தார். இது மிகப் பெரிய ஏமாற்றமாக ரசிகர்களுக்கு அமைந்தது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத தல ரசிகர்கள் களத்தில் இறங்கினர்!
தமிழக சட்டபேரவை
தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வந்த தலைவர்களிடம் இருந்து தற்போது நடக்கும் உலக டெஸ்ட் சேம்ப்பியன்சிப் போட்டியில் விளையாடும் கிரிக்கட் வீரர்கள் வரை “வலிமை update !! வலிமை update !! ” என ஒருவரை கூட விடாமல் சுத்தி சுத்தி update – ஐ கேட்டு அனைவரையும் அணை கட்டுகின்றனர் தல ரசிகர்கள்!
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நேற்று முன்தினம் தனது ரசிகர்களிடம் உரையாடலின் போது அங்கேயும் நம் தல ரசிகர்கள் வலிமை update கேட்டு அவரை லாக் செய்தனர். அப்போது கூறிய யுவன் ஷங்கர் ராஜா, வலிமை படத்தின் முதல் பாடல் வேற லெவலில் “தெறிக்கும்” எனவும் படத்தில் தாய்க்கு என அழுத்தமான பாடல் ஒன்று இருப்பதாகவும் அவர் கூறினார்.
சரி சரி படம் எப்போது வெளிவரும், அட்லீஸ்ட் first look ஆவது எப்போ வரும் என எதிர்ப்பார்க்கும் ரசிகர்ளுக்கு இதோ பதில்…
‘மாநாடு’ படத்தின் புரமோஷனுக்காக கிளப் அவுஸில்(Club House) உரையாடிய இசையமைப்பாளர் யுவன், வலிமை படம் குறித்து புதிய அப்டேட் வெளியிட்டுள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை முடிவுக்கு வந்திருக்கும் இந்த நிலையில் வரும் ஜூலை மாதத்திற்குள் First look கண்டிப்பாக வெளியாகும். அதன் அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பாளர் விரைவில் அறிவிப்பார் எனவும், படம் இந்த தீபாவளிக்கு கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் எனவும் தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.