டிசம்பர் 2021 க்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்: மத்திய அரசு

வரும் ஜூன் மாதம் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா 10 முதல் 12 கோடி கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை மத்திய அரசுக்கு வழங்க உள்ளதாகவும் ஜூலையில் 20 முதல் 25 கோடி தடுப்பூசிகளும் ஆகஸ்ட் மாதத்தில் 30 கோடி தடுப்பூசிகளும் கொள்முதல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கோவிட் தடுப்பூசி இயக்கம் குறித்து அதிகரித்து வரும் விமர்சனங்களுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா தனது முழு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்திவிடும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி 2021 க்குள் நிறைவடையும். 216 கோடி டோஸ் தடுப்பூசிகளை 108 கோடி மக்களுக்கு டிசம்பர் 2021 க்கு முன்னர் எவ்வாறு தடுப்பூசி போடுவார்கள் என்பதற்கான வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது.

Exit mobile version