லட்சத்தீவு பகுதியில் அரபிக்கடலில் உருவாகி இருக்கும் புயலானது தீவிர மற்றும் அதிதீவிர புயலாக மாறி அரபிக்கடலின் கடலோர மாநிலங்களான கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா வழியாக கடந்து குஜராத்தில் கரையை கடக்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த புயலால் தமிழகத்திற்கு எங்கு எவ்வளவு மழை பெய்யும் என்பது பற்றி காண்போம். நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது மழை இன்னும் நான்கு நாட்களுக்கு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.