Advertisement
சினிமா

#RRR பட்ஜெட் 350 கோடி ரிலீசுக்கு முன்பே 530 கோடி வசூல் | அனைத்திலும் பிரம்மாண்டம் காட்டும் ராஜமௌலி!

பாகுபலி பிரமாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலின் அடுத்த படைப்பு RRR. இந்த படத்தில் Jr.NTR  மற்றும் ராம் சரண் இணைந்து நடித்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி அஜய் தேவ்கன், ஆலியா பட்  இவர்களும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களல்லாமல் நமது தமிழ் நடிகரான சமுத்திரகனி அவர்களும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.  இந்த படத்தை ஒட்டுமொத்த திரையுலகம் மட்டுமல்லாமல் ரசிகர்களும்  எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

350 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தை DVV entertainment சார்பில் D.V.V தனய்யா  தாயாரித்திருக்கிறார். 2021 ஜனவரி மாதம் வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்பு covid 19 காரணத்தால் படப்பிடிப்பு தொடரமுடியாமல் போனதால் ரிலீஸ் தேதி தள்ளி போனது.

இப்போது படத்தை பற்றி சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. படம்  வருகிற அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகலாம்  என அறிவிக்கபட்டிருக்கிறது. இப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளம் மற்றும் தொலைக்காட்சி உரிமம் என சுமார் 530 கோடி ரூபாய்க்கு விற்பனை யாகியுள்ளது. எந்தந்த நிறுவனங்களுக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தமிழ் தொலைக்காட்சி உரிமம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஹிந்தி உரிமையை ஜி சினிமா பெற்றுள்ளது. மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உரிமையை ஏசியானெட், ஸ்டார் சுவர்னா மற்றும் ஸ்டார் மா சேனல்கள் பெற்றுள்ளன. இவைகளில்லாமல் ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு, டர்க்கிஷ், கொரியன் ஆகிய மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிட போவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இவற்றை Netflix இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

படத்தின் ரிலீசுக்கு முன்பே இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை ஆனதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.