Revision Exam For 12th Standard: 12ம் வகுப்புக்கு திருப்புதல் தேர்வு – பள்ளிக்கல்வித்துறை

கொரோனா இரண்டாம் அலை காரணமாக, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பள்ளி கல்வி அமைச்சராக அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளி கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் பொது தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை செய்தார்.

அப்போது, தேர்வுக்கான நாட்கள் தெரியாத நிலையில் கற்றல் நடைபெறாத காரணத்தால் 12ம் வகுப்பு மாணவர்கள் கற்றதை மறந்துவிடுவார்கள், அவர்களை தொடர்ந்து கல்வி செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும் என அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டது.  

இதனை தொடர்ந்து 12ம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயராகும் வகையில், ஞாயிறு நீங்கலாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

திருப்புதல் தேர்வு விவரம்:

S. No.DateSubjects
119.05.2021Tamil
221.05.2021English
324.05.2021Mathematics/ Zoology/ Commerce/ Agri Science/ Nursing General/ Nursing Vocational
426.05.2021Physics/ Economics/ Computer Technology
528.05.2021Chemistry/ Accountancy
631.05.2021Biology/ Botony/ History/ Business Maths and Statistices/ Vocational Subject
702.06.2021Computer Science/ Computer Application

தேர்வு நடைபெறும் முறை:

மாணவர்கள் தங்களது அனைத்து விடைத்தாள்களையும் பாட வாரியாக அடுக்கி பள்ளியில் நேரிடையாக வருகைபுரிந்தோ/பெற்றோர் மூலமாகவோ/ அந்த ஊரிலுள்ள ஏதேனும் ஒரு மாணவர் மூலமாகவோ பள்ளியில் ஒப்படைக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் அதனை பெற்று, அனைத்து விடைத்தாள்களையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

தலைமையாசிரியர் தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களையும் கட்டாயம் தேர்வில் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்வில் கலந்துகொள்ளமால் எவரேனும் விடுபடக்கூடாது. தலைமையாசிரியர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் இதனை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version