கம்போடியா நாட்டில் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் பணியில் அமர்த்தப்பட்டு இருந்த அரிய வகை மகவா எலி வயது மூப்பு காரணமாக பணி ஓய்வு பெறுகிறது.
கம்போடியா நாட்டில் பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 60 லட்சம் கண்ணிவெடிகளை புதைத்துள்ளனர், இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இவற்றை அப்புறப்படுத்த முடிவு செய்த கம்போடிய அரசு அந்தப் பணிகளுக்காக ஒரு எலியினை பயன்படுத்தியது. அதன் பெயர் மகவா என்பதாகும். இவ்வகை எலிகள் ஆப்பிரிக்க பகுதிகளில் காணப்படுகின்றன.
இதுவரை இந்த மகவா எலி 39 கண்ணிவெடிகளை கண்டுபிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வெடிக்காத, மனிதனுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களையும் , சுரங்களையும் கண்டுபிடித்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த விலங்குகள் நல அமைப்பான “நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம் ” என்ற அமைப்பு கடந்த 77 ஆண்டுகளாக மக்களுக்கு உதவி செய்யும் விலங்குகளை தேர்ந்தெடுத்து தங்கப்பதக்கம் வழங்கி வருகிறது. 2020 ஆம் ஆண்டிற்கான விருதினை மகவா எலிக்கு வழங்கி சிறப்பித்தது. மேலும் இவ்விருதினைப் பெறும் முதல் எலியும் இதுவேயாகும்.