தண்ணீர் குடிப்பதில் இவ்வளவு நன்மைகளா? | இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே
நம் உடலில் ஏற்படும் சில உபாதைகளை சரி செய்வதற்கு நம் அன்றாட வாழ்வில் சில பழக்கங்களை மாற்றி கொண்டாலே போதுமானது. அப்படி சிறிய மாற்றத்தால் நமது உடலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அவற்றில் ஒன்றுதான் “தண்ணீர்”. ஆம் நாம் அருந்த கூடிய தண்ணீர் நம் உடலுக்கு பல நன்மைகளை தருவதுடன் நோய் தீர்க்கும் மருத்தாகிறது.
எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்
நமது உடல் 70% நீரினால் ஆனது. நாம் உண்ணும் உணவிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் நீர்ச்சத்து நம் உடலுக்கு செல்கிறது அதுபோக நீராக நாம் அருந்த வேண்டிய அளவு 2 முதல் 3 லிட்டர். கோடை காலங்களில் 3 முதல் 4 லிட்டர் வரை அருந்தலாம். மேலும் உடல் எடையை பொருத்த அருந்த வேண்டிய நீரின் அளவு மாறுபடும். நம் உடல் எடையில் ஒவ்வொரு 20 கிலோவிற்கும் 1 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது 60 கிலோ எடை கொண்ட ஒரு நபர் தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
நீர்ச்சத்து அதிகம் எடுத்துக்கொள்ளளாம் என்று 6, 7 லிட்டர் தண்ணீர் அருந்துவது வீண் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அதிகப்படியான நீரை நமது உடல் சிறுநீராக வெளியேற்றுமே தவிர அதனால் அதிகப்பலன் இல்லை.
எப்போதெல்லாம் தண்ணீர் அருந்தலாம்?
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரினை அருந்தலாம். இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு கழிவுகளையும் வெளியேற்றும்.
உணவு அருந்துவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு நீர் அருந்துவது செரிமானத்திற்கு நல்லது
உடற்பயிற்சிக்கு முன்பு தண்ணீர் அருந்துவது உடலை சோர்வு அடையாமல் பாதுகாக்கும்
காய்ச்சல் , தலைவலியின்போது நீர் அருந்துவது விரைவில் குணமடைய உதவும்
நீர் அருந்தும் போது நாம் செய்யும்
தவறுகள்
தண்ணீர் குடிக்கும்போது நாம் செய்யும் தவறுகள் சிலவற்றால் அதன் பயன் இல்லாமலே போவதுண்டு.
• குளிரூட்டப்பட்ட நீர் நம்மில் பலருக்கு குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை அருந்துவது ஒரு வாடிக்கையான விஷயமாக இருக்கும். ஆனால் அப்படி நாம் குளிர்ந்த நீரை அருந்தும் போது அது நம் உடலுக்குள் சென்று நம் குடலில் இருக்கும் எண்ணெய் சத்துக்களை கொழுப்பாக மாற்றுகிறது. மேலும் நமது ரத்தக்குழாய்களில் சுருக்கம் ஏற்படுகிறது எனவே குளிரூட்டப்பட்ட நீரினை குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
• சாப்பிட்டஉடன் நீர் அருந்துவது இதுவும் நம்மில் பலர் அறியாமல் செய்யக்கூடிய சிறிய தவறுதான் சாப்பிட்டவுடன் நீர் அருந்துவது என்பது பல காலமாக நாம் பழகிப்போன ஒன்று சாப்பிட்டவுடன் நீர் அருந்துவதால் நமது வயிறு நிரம்பிய உணர்வு நமக்கு ஏற்படும். ஆனால் உணவு உண்டபின் நமது வயிற்றில் உணவைச் செரிக்கவைக்க சில ஹைட்ரோ குளோரைடு மேலும் சில நொதிகளை சுரக்கின்றது சாப்பிட்டவுடன் நீர் அருந்துவதால் அந்த வீரியம் குறைந்து நமது சாப்பாடு சரிவர ஜீரணிக்க படாமல் போகிறது இதனால் உணவிலிருந்து நமக்கு கிடைக்கும் சத்துக்கள் முழுவதும் கிடைப்பதில்லை.
• இது சிறிய வயதிலிருந்து நமக்கு பழக்கப்படுத்தப்பட்ட ஒரு பழக்கம் உதட்டில் ஒட்டாமல் அன்னார்ந்து தண்ணீர் குடிப்பது. இது சுகாதாரமான பழக்கமாக கருதப்பட்டாலும் இப்படி தண்ணீர் குடித்தால் அதிகப்பலன் கிடைப்பதில்லை. எப்போதும் தண்ணீர் அருந்தும்போது அமர்ந்து எச்சிலோடு சேர்த்து மெல்லமாக அருந்த வேண்டும். இப்படி குடிப்பதால் நமது வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவு சீராக பரா
மரிக்கப்படுகிறது.
சரியாக நீர் அருந்துவதன் பலன்கள் :
உடலியக்கத்திற்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது .
குடலியக்கம் நன்கு செயல்படுகிறது.
உடலில் உள்ள நச்சுப்பொருள்கள் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தப்படுத்தப்படுகிறது.
மூளை செயல்திறன் அதிகரிக்கிறது.
உடல் வெப்பநிலை சீராக பராமரிக்கப்படுகிறது.
தசைப்பிடிப்புகள் வராமல் தடுக்கிறது.
இத்தகைய அருமருந்தாக செயல்படக்கூடிய நீரினை சரியான அளவில் சரியான நேரத்தில் அருந்தி அதன் முழுப்பயன்களை பெறுவொம்.