+2 பொதுத்தேர்வு நடக்குமா? நடக்காதா? தேர்வே எழுதாமல் ரிசல்ட்டுக்கான டென்ஷனில் தமிழக மாணவர்கள்!

CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வந்ததில் இருந்தே தமிழக அரசு என்ன செய்யும் என்று ஆர்வமுடன் கவனித்து வருகின்றனர் மாணவர்கள்.
+2 பொதுத் தேர்வை ரத்து செய்த மாநிலங்கள்:
மகாாஷ்டிரா, பீஹார், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், மத்திய பிரதேசம், உத்திரகான்ட் ஆகிய மாநிலங்களில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கல்வியாளர்கள் சொல்வது என்ன?
தற்போதைய சூழ்நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவு எடுப்பது சரியானதாக இருக்காது. தேர்வை நடத்தினால் வரும் பாதிப்புகளை விட தேர்வு நடத்தாமல் இருந்தால் வரும் பாதிப்புகள் அதிகம் ஏற்படும்.
உயர் கல்விக்காக கல்லூரியில் சேர்வதற்கு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் தேர்வு வைத்து மதிப்பெண் வழங்குவது அவசியமாகிறது. தேர்வை ரத்து செய்தால் கல்லூரிகள் நுழைவுத்தேர்வு வைத்து சேர்க்கை நடத்தும் சூழல் ஏற்படும். இந்த நிலை மாணவர்களை பெரிதும் பாதிக்கும்.
தமிழக அரசு நிலைப்பாடு என்ன?

தமிழக அரசு அனைவரிடமும் கருத்துக்களை கேட்டு பின்னர் அந்த கருத்துக்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். முன்னதாக பள்ளிக்கல்வி துறை அனைவரிடமும் பெற்ற கருத்துக்களை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் கொடுத்துள்ளனர்.
இதுபற்றிய ஆலோசனைக் கூட்டம் நாளை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கருத்துக்களையும் ஆராய்ந்து முதல்வர் முடிவை அறிவிப்பார்.