Advertisement
ஆரோக்கியம்

இதயத்தை பாதுகாக்கவும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் சமையலறையில் உள்ள மிளகு போதுமாம்! | தெரிந்த பொருள் தெரியாத நன்மைகள்

நம் சமையலறையில் உள்ளவற்றில் அதிக மருத்துவ குணம் வாய்ந்த ஓரு பொருள் தான் மிளகு. வெள்ளை மிளகு என்பது இந்திய உணவுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள். இது அதிக உடல் சுகாதார நன்மைகளை கொண்டுள்ளது. மிளகு ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிளகில் உள்ள பெப்பரின் என்னும் பொருள்தான், இதற்கு தனித்துவமான சுவையைத் தருகிறது. மேலும் மிளகில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, ஜிஙக், குரோமியம், வைட்டமின் ஏ, சி போன்ற பல்வேறு சத்துக்களும் அடங்கியுள்ளன.

தலைவலியைக் குணப்படுத்துவது முதல் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பது வரை, வெள்ளை மிளகு பல பொதுவான நோய்களைப் போக்க உதவுகிறது. இந்த பதிவில், வெள்ளை மிளகின் அனைத்து நன்மைகளையும் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Advertisement

வலி நிவாரணி

வெள்ளை மிளகு ஒரு சிறந்த வலி நிவாரணி ஆகும். இதிலுள்ள அதிக கேப்சைசின் உள்ளடக்கம் உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. மேலும், இது தசைப்பிடிப்பு அல்லது சுளுக்கு வலியிலிருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

எடை குறைப்பு

கேப்சைசின் உள்ளடக்கம் உடலில் உள்ள கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. இது உங்களின் எடையை குறைக்க உதவுகிறது. எடை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், வெள்ளை மிளகு உங்களுக்கு உதவும்.

புற்றுநோயை குணப்படுத்த உதவுகிறது

நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி சங்கம் நடத்திய ஆய்வின்படி, கேப்சைசின் உள்ளடக்கம் மனித உடலில் உள்ள புற்றுநோய் செல்களைக் கொல்லும். புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்த வெள்ளை மிளகு பயனுள்ளதாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தலைவலியைக் குணப்படுத்துகிறது

தலைவலியைக் குணப்படுத்துவதற்கு வெள்ளை மிளகு உதவியாக இருக்கும். மூளைக்கு வலியை கடத்தும் நியூரோபெப்டைடு என்ற பொருளைத் தடுக்க காப்சைசின் உள்ளடக்கம் உதவுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இருமல் குணமாகும்

உங்களுக்கு தொண்டை புண் இருந்தால், வெள்ளை மிளகை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இதில் ஆண்டிபயாடிக் பண்புகள் நிறைய இருக்கிறது. இதை உட்கொள்ளத் தொடங்கினால் இருமல் மற்றும் சளி போன்றவற்றிலிருந்து எளிதில் நிவாரணம் அளிக்க உதவுகிறது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது

இது ஃபிளாவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி, ஏ ஆகியவற்றில் நிறைந்துள்ளது. இவை இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உங்கள் உணவில் தினமும் வெள்ளை மிளகு சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

இதய ஆரோக்கியம்

வெள்ளை மிளகின் வெப்பத்தை உருவாக்கும் பண்புகள் ஒருவரை அதிகமாக வியர்க்க வைக்கின்றன. இது உடலில் உள்ள அதிகப்படியான திரவங்களை வெளியேற்ற வழிவகுக்கிறது. அதிகப்படியான திரவத்தை அகற்றுவதால் இதயத்தில் உள்ள அழுத்தத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளை மிளகின் பயன்கள்

வெள்ளை மிளகு பொதுவாக சூப் மற்றும் பிற உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. சாலட்களின் சுவையை அதிகரிக்க நீங்கள் மிளகை பயன்படுத்தலாம் மற்றும் அதில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களையும் நீங்கள் பெறலாம்.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.