Advertisement
சினிமா

மிஸ் பன்னிடாதீங்க! விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் November Story வலைத் தொடர்

சமீபத்தில் OTT – ல் வெளிவந்த NOVEMBER STORY என்ற வலைத் தொடர் (web series) தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

தமன்னா, பசுபதி, G.M குமார் மற்றும் முக்கிய நடிகர்கள் நடித்து கடந்த 20 மே.2021 அன்று Disney+Hotstor – ல் வெளிவந்த தொடர் தான் November story. மொத்தம் 7 எபிசோடுகளைக் கொண்ட இந்த தொடர், பார்ப்பவர்களை அடுத்து என்ன நடக்கப்போகிறதோ… என்ற ஆர்வத்தை ஆச்சர்யத்துடன், இந்திரா சுப்ரமணியன் தனது இயக்கத்தால் பிரம்மிக்க வைத்திருப்பார்.

Advertisement

இருப்பினும் இந்த தொடரில் வரும் சில காட்சிகள், பிணவறையில் பிரேத பரிசோதனை நடைபெறும் விதங்களை காட்சிபடுத்தியிருப்பார்கள். சிலவற்றை கண்களால் பார்க்க முடியாத அளவிற்கு கொடூர முறையில் காட்சியாக்கப்பட்டிருக்கிறது. இந்த காட்சிகள் டிவியில் சென்சார் செய்த பிறகே ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வரும் வெள்ளியன்று (4.6.2021) இரவு 10 மணிக்கு இந்த தொடரின் முழு எபிசோடுகளையும் விடிய விடிய ஒளிபரப்பு செய்ய முடிவு செய்துள்ளது விஜய் டிவி !

இதுவரை Disney+Hotstar ல் VIP சப்ஷ்கிரிப்சன் அல்லது பிரீமியம் சப்ஷ்கிரிப்சன் பெற்றவர்கள் மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்த இந்த வலைத்தொடர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.