Advertisement
கிரிக்கெட்விளையாட்டு

மகுடம் சூட்டிய நியூசிலாந்து | முதல் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் கோலி படையை வீழ்த்திய BLACK CAPS

இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளின் முடிவுகளை வைத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள். இவ்வளவு பெரிய தொடரின் இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்படுவதும் மீண்டும் தொடங்குவதுமாக இருந்தது.

குறைந்த விலையில் ஸ்போர்ட்ஸ் சூ ஷாப்பிங் செய்யலாம்

Advertisement

IND vs NZ WTC final 2021 முதல் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது. முதல் நாளில் ஒரு ஓவர் கூட வீசப்படவில்லை. பிறகு இரண்டாவது நாள் தொடங்கப்பட்ட ஆட்டத்தில் இந்தியா 64.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

கோலி 44 ரன்கள் ரஹானே 29 ரன்களுடனும் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 92.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்சை முடித்துக்கொண்டது. பிறகு நியூசிலாந்து 49 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 101 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் மீண்டும் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. இவ்வாறாக மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

மழை காரணமாக நான்காவது நாள் ஆட்டம் முழுவதும் கைவிடப்பட்டது. ஐந்தாவது நாளில் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை 249 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 32 ரன்கள் முன்னிலையுடன் முதல் இன்னிங்சை முடித்தது. முதல் பத்து ஓவர்களில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சை சரியாக தொடங்கியது, ஆனால் தொடக்க வீரர்கள் இருவரும் டிம் சவுத்திக்கு (2/17) பலியானார்கள். ஐந்தாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழந்து 64 ரன்களுடன் களத்தில் இருந்தது.

Advertisement

இரண்டு நாட்கள் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டதால் இழந்த நேரத்தை ஈடு செய்ய ஆறாவது நாளான ரிசர்வ் நாளில் ஆட்டம் தொடரப்பட்டது. 64 ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களுக்கு சுருண்டது. 139 ரன்கள் என்ற எளிய இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 45.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சவுத்தாம்ப்டனில் நியூசிலாந்து இந்தியாவை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. லார்ட்ஸில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சூப்பர் ஓவரில் பெற்ற தோல்வியை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிளாக் கேப்ஸ் தங்களது முதல் பெரிய உலகளாவிய பட்டத்தை பெற்றது.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.