Advertisement
சினிமா

மணிரத்னம் உண்மையில் ஒரு ரத்தினம் | ஒரு சிறப்பு பார்வை

திரையுலகில் தனித்தன்மையோடு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதில் தொடர்ந்து வெற்றிநடை போடுகிற இயக்குனர்கள் வெகுசிலரே, அத்தகையோருள் மணிரத்னம் ஒருவர். இவரது இயற்பெயர் கோபால ரத்னம் சுப்பிரமணியம். பிறந்த நாள் June 2 ஆம் தேதி 1956. மனைவி சுஹாசினி மணிரத்னம் மகன் பெயர் நந்தன். இந்த கட்டுரையில் இவரது திரையுலகப்பயணத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

திரைப் பயணத்தின் தொடக்கம்:

Advertisement

1983 ஆம் ஆண்டு “பல்லவி அனுபல்லவி” என்கிற கன்னடப்படம் மூலமாக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமலேயே தனது முதல் படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு அவரது இயக்கத்தில் வெளியான நான்கு படங்களும் சரியான வரவேற்பை பெறவில்லை.

1986ல் வெளியான அவரது ஐந்தாவது படமான “மௌன ராகம்” அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு வெளியான நாயகன்,ரோஜா, உயிரே, பம்பாய் போன்ற படங்களால் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனராக அறியப்பட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் சிறந்த படங்களை இயக்கிய இயக்குனராவார்.

படங்களில் சமூகப்பொறுப்பு

மணிரத்னம் அவர்கள் இந்தியாவில் நிகழும் வெவ்வேறு சமூக பிரச்சினைகளை வெகுநேர்த்தியாக தனது படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்.
மதப்பிரிவினையை சொல்லும் “பம்பாய்”, ஈழ அரசியல் பேசும் “கன்னத்தில் முத்தமிட்டால்”
தீவிரவாதத்தின் வீரியத்தை கூறும் “ரோஜா” என தனக்குரிய பாணியில் கையாண்டிருப்பார்.

இதுமட்டுமல்லாமல் தமிழ் மண்ணின் திராவிட அரசியலை பேசும் படமான “இருவர்” படமும் முக்கியமானதாகும். மேலும் இவரது படங்களை இந்தியாவிற்குள் மட்டுமே காட்சிபடுத்துவார் என்பதும் கூடுதல் தகவல்.

மணிரத்னம் பாணி

திரைக்கதை ,வசனம் , இசை , ஒளிப்பதிவு என எல்லாவற்றுக்கும் மணிரத்னத்தின் தனித்தன்மை என்று உள்ளது. அதிக சத்தமில்லாமல் ஒற்றைவரி வசனங்கள், காதல் வரிகள், காதல் ரசம் சொட்டும் காட்சிகள், முற்போக்கு சிந்தனையுள்ள கதாநாயகிகள், கண்களை கட்டிப்போடும் இயற்கை காட்சிகள் இப்படி அனைத்திலும் தனித்தன்மையோடு மிளிர்வதால்தான் இன்றும் முன்னனி இயக்குனராக உள்ளார். இன்றுவரை இந்திய சினிமாவில் இரயிலில் படமாக்க பட்ட முழுப்பாடல் மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் இடம்பெற்ற தைய்யா தைய்யா பாடல் மட்டுமே.

பெற்ற விருதுகள்

மணிரத்னம் அவர்களுக்கு ஆறு நேஷனல் பிலிம் விருது, நான்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டுள்ளது. இவைகளல்லாமல் இன்னும் பல விருதுகள் பல்வேறு திரைப்பட விழாக்களில் வழங்கப்பட்டுள்ளது. இவரது திரையுலக பங்களிப்புக்காக இந்திய அரசால் 2002 ஆம் ஆண்டு ” பத்ம ஶ்ரீ” வழங்கப்பட்டது.

அடுத்த படைப்பு – பொன்னியின் செல்வன்

மணிரத்னம் அவர்களது மகுடத்தில் மாணிக்கமாக ஒளிறப்போகும் அவரது அடுத்த படம் “பொன்னியின் செல்வன்”. பண்டைய இதிகாச புராணங்களை நடைமுறை வாழ்க்கையில் சரியாக பொருந்தும் அளவிற்கு படமாக்குவதில் அவர்க்கு நிகர் அவரே. மகாபாரதத்தை தளபதியாகவும், இராமயணத்தை இராவணனாகவும் படம் எடுத்து அசத்திருக்கிறார்.

இப்போது கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். இப்படத்தில் கார்த்திக், விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். இசைப்புயல் இசையமைக்கிறார். இப்படம் பிரமாண்ட வெற்றியை பெறும் என்பதில் ஐயமில்லை.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.