“எனக்கென்னமோ நீங்க எதோ பெரிய தப்பு பண்றீங்க-னு தோணுது” – தியேட்டர் உரிமையாளர்கள் தனுஷுடன் வருத்தம்
ஜகமே தந்திரம் ஜூன் 18ல் Netflix ல் ரிலீஸ்
நடிகர் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் திரைப்படம் NETFLIX வலைத்தளத்தில் வெளியாக உள்ள நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.
தனுஷ் + கார்த்திக் சுப்புராஜ் + சந்தோஷ் நாராயணன் இவர்களின் combo – வில் உருவாகியுள்ள சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதாவின் கதை தான் இந்த “ஜகமே தந்திரம்”
தனுஷின் இந்த Gangster படத்தை ரசிகர்கள் திரையில் பார்த்து கொண்டாடுவதற்கும், திரையரங்கு உரிமையாளர்கள் இப்படம் வசூல் வேட்டையாடும்… என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் கொரோனா வின் இரண்டாம் அலை மற்றும் முழு ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்ற நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை OTT – யில் வெளியிட முடிவு செய்தனர், பின்னர் பல OTT நிறுவனங்கள் படத்தை வாங்குவதற்கு முன் வந்த நிலையில், NETFLIX ஒரு பெரிய தொகையை கொடுத்து டிஜிட்டல்-ல் வெளியிடுவதற்காக படத்தை கைப்பற்றினர் !
இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் இன்று வரை ரசிகர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் தங்களது வருத்தங்களை சுவரொட்டியாலும் இணையதள வாயிலாகவும் நடிகர் தனுஷிடம் கதறிக்கொண்டே இருக்கின்றனர்.
ஒருபக்கம் படம் வெளியாகிறது என்ற சந்தோஷம் தயாரிப்பாளர்களிடையே இருந்தாலும் கார்த்திக் சுப்புராஜ் கதையில் தனுஷ் – ன் அசுர நடிப்பில், சனா – வின் மேஜிகள் இசையில் ஒரு Gangster படத்தை திரையரங்கில் கொண்டாட முடியவில்லையே, எனக்கென்னமோ நீங்க எதோ பெரிய தப்பு பண்றீங்க-னு தோணுது என்ற இப்படத்தின் வசனத்தின் மூலம் ரசிகர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் memes – களில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.