தற்போது தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவது சற்று ஆறுதலாக இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் இன்னும் குடி கொண்டுள்ளது கொரோனா. இன்னும் இதன் நோய் தாக்கம் குறைந்தபாடு இல்லை.
அரசு சொல்லும் விதிமுறைகளை மக்கள் சிலர் மீறி வருவதால் அனைத்து மக்களுக்கும் தற்போது நோய்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் ஈரோடு கடந்த ஆண்டு முதல் தாக்கத்தை சந்தித்து இன்னலுக்குள்ளானது. இரண்டாம் அலையில் ஊரடங்கு பிறப்பித்த போதும் மற்ற மாவட்டங்கள் போல சதாரணமாக தான் இருந்தது.
ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை, சில நாட்களாகவே ஈரோடு மாவட்டத்தில் கொரோனா குறையாமல் உள்ளது.
ஜூன் 06 கொரோனா விபரம்
இன்று ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 1694 பேரை பாதித்துள்ளது, மேலும் நோய் தோற்று குணமாகியவர்கள் 2078, இறப்பு 10 பேர். இன்று மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமையில் சிகிச்சை பெற்று வருபவர்களும் சேர்த்து 15492 உள்ளனர்.