இரண்டு நாட்களாக இ-பதிவு முறையில் திருமணம் என்ற காரணத்தை நீக்குவதும் சேர்ப்பதுமாக இருந்த விளையாட்டு முடிவுக்கு வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது திருமணம் என்ற தெரிவு சேர்கப்பட்டு அதற்கு தெளிவான விளக்கத்தையும் அரசு கொடுத்துள்ளது.
புதிய விதிமுறைகள்:
Advertisement
- ஒரு திருமண அழைப்பிதழை வைத்து ஒரு முறை மட்டுமே இ-பதிவு செய்ய வேண்டும். அழைப்பிதழை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- மணமகன், மணமகள், தாய், தந்தை இவர்களில் யாராவது ஒருவர் மட்டுமே விண்ணப்பதாரர் ஆக இருந்து விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் சேர்த்து ஒரே இ-பதிவு செய்ய வேண்டும்
- திருமண விழாவில் பங்கேற்பவர்களின் வாகன எண்கள், ஓட்டுநர் பெயர், கைப்பேசி எண், பயணிப்பவர்களின் பெயர், விவரங்கள் மற்றும் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பதிவேற்ற வேண்டும்
- தவறான தகவல்களை பயன்படுத்தி இ-பதிவு செய்தால் அவர்கள் மீது கிரிமினல் அல்லது சிவில் வழக்கு பாயும்
இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.