இ-பதிவு முறையில் திருத்தம்: திருமணம் சேர்ப்பு, இவர்களுக்கெல்லாம் விலக்கு

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் அதனை கட்டுபடுத்த இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியே செல்வதற்கு இ-பதிவு செய்து அதன் நகலை வைத்துக்கொண்டு பயணிக்கலாம் என்று அரசு அறிவித்தது.

இ-பதிவு முறையில் திருமணம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த காரணங்களுக்காக பயணம் செய்ய அனுமதிக்கிறது. இதில் திருமணம் என்ற காரணம் அதிகப்படியான மக்கள் தேர்வு செய்து பயணித்ததால் அதனை நீக்கியிருந்த நிலையில் அதிகப்படியான மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று தற்போது மீண்டும் இ-பதிவு முறையில் சேர்த்து உள்ளனர்.

விலக்கு: ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம். இ-பதிவு தேவையில்லை.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version