Advertisement
Women

பாலியல் குற்றங்களுக்கு எதிரான யுவனின் பாடல் வெளியானது! | Don’t Touch Me song by Yuvan Shankar Raja

யுவன் ஷங்கர் ராஜா பாடல்கள் என்றாலே காதலில் விழுந்தது போல் நம் மனம் உணர தொடங்கி விடும்! அந்த அளவிற்கு இவரது குரலின் மாயவலையால் நம்மை சிக்க வைத்திருப்பார். இவர் கற்பழிப்புக்கு எதிராக பாடிய பாடல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த பாடலை கேட்காதவர்களுக்காக இந்த பக்கத்தின் இறுதியில் அதற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

எப்போதும் Independent song -க்கு என தனி எதிர்பார்ப்பும் ரசிகர்களும் உள்ளனர், நான்கு வருடத்திற்கு முன் ‘ஹிப் ஹாப் ஆதி’ தனது Independent song -ன் மூலமாக சமூக பிரச்சினைகளை பளிச்சென உடைத்தெரிந்தார் இதனால் தமிழ் மக்கள் மற்றும் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார், தற்போது சினிமாவில் முன்னணி நடிகர்கள் படத்திற்கு இசையமைத்தும், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது இவரை போல ஏராளமானோர் independent song – ஐ பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.

Advertisement

இதில் சமீபத்தில் வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் ஆறு முதல் அறுவது வரை உள்ள அனைவரையும் குக்கூ… குக்கூ…என்ற பாடல் வரியால் கவர்ந்திழுத்தது. தற்போது யுவன் ஷங்கர் ராஜா, நேர்கொண்ட பார்வை படத்தில் EDM என்ற பாடலில் பாடிய பாடகி ‘யுநோஹு’ மற்றும் என்ஜாய் என்ஜாமி பாடலை பாடிய ‘அறிவு’ இவர்கள் மூவரும் இணைந்து ‘Don’t touch me’ என்ற பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராகவும், பெண்களின் அதிகாரத்தை பேசும் படியும் புதிய independent பாடலை பாடி வெளியிட்டுள்ளார்கள்.

இப்பாடலை பற்றி யுவன் ஷங்கர் ராஜா கூறியதாவது :

‘Don’t touch me’ இப்பாடல் கற்பழிப்புக்கு எதிராக எதிரொலிக்கும் பாடலாக இருக்கும், மேலும் பெண் அதிகாரத்தை பற்றி பேசும் மற்றும் சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினத்தை முன்னிட்டு – ஜூன் 26, துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளை எதிர்கொண்ட அனைத்து பெண்களுக்கும் எங்களின் இந்த “Don’t touch me” பாடலை அர்ப்பணிக்கிறோம் என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இப்பாடல் Spotify, Apple Music, Amazon music, Resso, Gaana, Jio Saavn, Hungama, Wynk Music போன்ற தளங்களில் வெளியாகி பலரால் கேட்கப்பட்டு வருகிறது.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.