இந்தியாவில் 40 நாட்களுக்குப் பிறகு, தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழே குறைந்தது

இந்தியாவில் 40 நாட்களில் முதல் முறையாக 2 லட்சத்துக்கும் குறைவான புதிய கோவிட் -19 வழக்குகளை நேற்று பதிவு செய்தது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் 27 நாட்களில் மிகக் குறைவானது, அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 3,260 இறப்புகள் பதிவாகியுள்ளன.

மே 17-23 ல் இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வழக்குகள் மொத்தம் 17,86,873 ஆகும். இது மே 10-16-ல் பதிவான 23,00,440 நோய்த்தொற்றுகளைவிட மிக குறைவானது.

திங்களன்று, நாடு 1,95,994 புதிய தொற்றுநோய்களைப் பதிவுசெய்தது. கடைசியாக கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி 2 லட்சத்திற்கும் குறைவான எண்ணிக்கையை பதிவு செய்த நாளாகும். ஏப்ரல் 14 க்குப் பிறகு இந்தியாவில் ஒரு நாளில் 2 லட்சத்துக்கும் குறைவான வழக்குகள் பதிவாகியிருப்பது இதுவே முதல் முறை. நாட்டில் செயலில் உள்ள வழக்குகள் 26 லட்சத்துக்குக் குறைந்துவிட்டன.

தற்போது நாட்டில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சற்று நம்பிக்கையை கொடுத்துள்ளது.

Exit mobile version