நாளை முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைகிறது – தமிழக அரசு

ஆவின் பால் விலை குறைப்பு நாளை (May 16) முதல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து விற்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு ஆவின் நிறுவனம் விற்கும் தனது 5 வகையான பால் பாக்கெட்டுகளுக்கும் (different coloured packets) பொருந்தும்.

சில்லறை விற்பனை:

பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் நேரடியாக 16.05.2021 முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளை புதிய விலைப்பட்டியல்படி பெற்றுக்கொள்ளலாம்.

வ. எண்பால் வகைகள்தற்போதைய விலை
(ரூ)
புதிய விலை
(ரூ)
1சமன்படுத்தப்பட்ட பால்
1000 ml (TM)
4340
2நிலைப்படுத்தப்பட்ட பால்
500 ml (SM)
23.5022
3நிறை கொழுப்பு பால்
500 ml (FCM)
25.5024
4இருமுறை சமன்படுத்தப்பட்ட பால்
500 ml (DTM)
2018.50
5டீமேட் பால்
1000 ml (Teamate)
6057
புதிய விலைப்பட்டியல்

பால் அட்டை விற்பனை:

பால் அட்டை வைத்திருப்போருக்கும் லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான விலைப்பட்டியல்:

வ. எண்பால் வகைகள்தற்போதைய விலை
(ரூ)
புதிய விலை
(ரூ)
1சமன்படுத்தப்பட்ட பால்
1000 ml (TM)
4037
2நிலைப்படுத்தப்பட்ட பால்
500 ml (SM)
22.5021
3நிறை கொழுப்பு பால்
500 ml (FCM)
24.5023
4இருமுறை சமன்படுத்தப்பட்ட பால்
500 ml (DTM)
19.5018
பால் அட்டை விலைக்குறைப்பு பட்டியல்

அரசு செய்திகுறிப்பு: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றபின் 5 அரசாணைகள் பிறப்பித்துள்ளார்கள். அதில் இரண்டாவதாக பொதுமக்கள் நலன் கருதி, ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.05.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசாணை பிறப்பித்துள்ளார்கள். அதன்படி வரும் ஞாயிற்றுகிழமை (மே 16) முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும் இதுபோல அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணையுங்கள் https://t.me/Tamil24Newsin

Exit mobile version