Advertisement
அரசியல்சமூகம்தகவல்

விஜயகாந்த்துக்கு மூச்சு திணறல் மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்கள் இன்று அதிகாலை திடீர் மூச்சு திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அனைவரின் வேண்டுதலும் அவர் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்பதேயாகும்.

இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். பிறகு நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் சங்க தலைவர் ஆனார். அந்த காலகட்டத்தில் பல நன்மைகளை பலருக்கு செய்து இருக்கிறார்.

Advertisement

பிறகு தேமுதிக கட்சியை தொடங்கி அதிலும் மக்களின் நன்மதிப்பை பெற்று 2011 சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் என்ற பொறுப்பும் அவருக்கு கிடைத்தது. சமீப காலமாக அவருக்கு அவ்வப்போது உடல் நலக் குறைவு ஏற்படுவதும் சிகிச்சை பெறுவதுமாக இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த தேர்தலில் கூட அவர் தீவிர பிரச்சாரம் செய்யாமல் கையை மட்டும் அசைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தற்போது அவருக்கு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருப்பது அவருடைய ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.