
இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மராத்தி என இவற்றை எல்லாம் தெரியும், ஏன்?அயல் தேசத்து மொழிகளான பிரஞ்ச், ஜாப்பனீஸ், டர்க்கிஷ் இவற்றைக் கூட கேள்விப்பட்டிருப்போம் அதென்ன KiLiKi என்ற ஒரு மொழியா என ஆச்சரியப் படுகிறீர்களா? இதோ அதற்கான பதில்.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்ட வெற்றியடைந்த பாகுபலி முதல் பாகத்தை அனைவருமே பார்த்திருப்பீர்கள் அதில் காலகேயர்கள் பேசுவதற்கு என்று தனியாக உருவாக்கப்பட்ட ஒரு மொழியே “KiLiKi”. இந்த படத்திற்கான இதுவரை வழக்கத்தில் இல்லாத அல்லது புதிய ஒரு மொழியை உருவாக்க சொல்லி ராஜமௌலி கேட்டாராம் அதற்கென பிரத்தியேகமாக இந்த மொழி உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் பாடலாசிரியர் மதன் கார்க்கி.

பாகுபலி படத்திற்கென ஒலி வடிவமாகவே இந்த மொழி உருவாக்கப்பட்டது. பாகுபலி படத்தின் வெளியீட்டுக்கு பிறகு இதனை ஒரு தனி புதிய மொழியாகவே வெளியிட மதன் கார்க்கி முடிவெடுத்தார். அவரின் முயற்சியே இந்த புதிய மொழியாகும்.
மதன் கார்க்கி அவர்கள் இதற்காக தனியாக எழுத்து வடிவத்தையும் இலக்கண விதிகளையும் வகுத்துள்ளார். அனைவரும் எளிமையாக இந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இதன் எழுத்துக்கள் ஒரு குறியீடு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள மொழிகளில் மிக எளிமையாக கற்றுக் கொள்ளக் கூடிய மொழி இந்த ” KiLiKi” என்கிறார் மதன் கார்க்கி .
எப்படி கற்றுக்கொள்வது என்று யோசிக்கிறீர்களா இதோ அதற்கான வழி இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளம் KiLiKi.in இதற்குள் சென்றால் இந்த மொழியை பேச எழுத கற்றுக்கொள்ள முடியும். இதில் நாம் அந்த மொழியை எளிமையாக எழுதி படிக்க கற்க முடியும். மேலும் இதில் மொழி சார்ந்த விளையாட்டுகள், இந்த எழுத்துக்களை வைத்து விளையாடும் சொல் விளையாட்டுக்கள் போன்றவையும் இணையதளத்தில் உள்ளன.
மேலும் ஒரு சுவாரசியமான தகவல் பாகுபலி வெற்றிக்குப் பிறகு பாடகி ஸ்மிதா அவர்கள் காலகேயர் மொழியில் ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் ஒரு ஆல்பம் பாடல் உருவாக்கப்பட்டது. அதன் யூடியூப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.