Advertisement
தகவல்

World Environment Day (WED) | உலக சுற்றுச்சூழல் தினம் | முக்கியத்துவம், நோக்கம், கருப்பொருள்

உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day) ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது.

வரலாறு

உலக சுற்றுச்சூழல் தினம் ஐக்கிய நாடுகள் அவையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து 1974 ல் முதல் உலக சுற்றுச்சூழல் தினம் “ஒரே ஒரு பூமி” என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. 1974 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட்டம் நடத்தப்பட்டாலும், 1987 ஆம் ஆண்டிலிருந்து தான் சுழற்சி முறையில் உலகின் பல்வேறு நாடுகளை மையமாக வைத்து கொண்டாடும் முறை கொண்டு வரப்பட்டது.

Advertisement

தலைமை ஏற்று நடத்தும் நாடு (2021)

உலகின் பல்வேறு நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக (Hosting) ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு பாகிஸ்தானால் நடத்தப்படுகிறது.

கருப்பொருள் (Theme)

2021 உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான கருப்பொருள் “சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு” (Ecosystem Restoration) ஆகும்.

Photo Credit: @Twitter

உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுவதற்கான நோக்கம்

மனித நடவடிக்கைகளால் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற விளைவுகளும் எதிர்பாராத அளவை விட ஆபத்தானதாகவே இருக்கிறது. உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலக அளவில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.

Photo Credit: @Twitter

கொரோனாவும் சுற்றுச்சூழலும்

கொடிய கொரோனா வைரஸின் உலகளாவிய பரவல் நம் அன்றாட நடவடிக்கைகளை பாதித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் நகரங்களில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக காற்று மற்றும் நீர் மாசுபாடு வெகுவாக குறைந்தது. வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் துகள்களால் ஏற்படும் காற்று மாசுபாடு குறைந்தது.

மேலும், நிலைமை மீண்டும் சாதாரணமாக மாறும் போது, சுற்றுச்சூழல் மீண்டும் பாதிக்கப்படலாம். நீண்டகால இலக்குகள் மற்றும் உத்திகள் மற்றும் கொள்கைகளை முறையான செயல்படுத்துதல் ஆகியவை உலகளாவிய சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முக்கிய தேவை ஆகும்.

ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் பூர்த்தி செய்ய பூமி போதுமானது, ஆனால் ஒவ்வொரு மனிதனின் பேராசைக்கும் அல்ல.

– மகாத்மா காந்தி

அதன் மண்ணை அழிக்கும் ஒரு தேசம் தன்னை அழிக்கிறது. காடுகள் என்பது நம் நிலத்தின் நுரையீரல், காற்றை சுத்திகரித்தல் மற்றும் நம் மக்களுக்கு புதிய பலத்தை அளிக்கிறது.

– பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.