மியூகோமிகோசிஸ் (Black Fungus) என்பது ஒரு பூஞ்சை தொற்று ஆகும். நாள்பட்ட வியாதிகளுக்கு தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு சுகாதார பிரச்சினைகள் மற்றும்
சுற்றுச்சூழல் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடும் திறனை அந்த மருந்துகளே குறைக்கின்றன. இவ்வாறு வேறு வியாதிகளுக்கு தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டு இருப்பவர்களை இந்நோய் எளிதாக தாக்குகிறது. பூஞ்சை வித்துகளை காற்றில் இருந்து சுவாசித்த பிறகு சைனஸ் அல்லது நுரையீரல் பாதிக்கப்படுகிறது.
யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?
- கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் இருப்பவர்கள்
- ஸ்டெராய்டுகளால் நோயெதிர்ப்பு தடுப்பு பெறுபவர்கள்
- நீண்ட நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ளவர்கள்
- இணை நோய்களுடன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள்
- கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் குணமடைந்து வீடு திரும்பியவர்கள்
என்ன பாதிப்புகள் ஏற்படும்?
- கண் வலியுடன் மங்கலான அல்லது இரட்டை பார்வையாக தெரியும். காய்ச்சல், தோல் புண் ஏற்படும்
- ஒரு பக்க முக வலி, உணர்வின்மை அல்லது வீக்கம்
- பல் வலி, பற்கள் தளர்வது, தாடை வலி
- மார்பக வலி
- மூச்சுத்திணறல்
பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
- நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்
- ஸ்டெராய்டுகளை எடுத்துக்கொண்டு இருந்தால் அதனை சரியான நேரத்தில், சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.
- இம்யூனோமாடூலேட்டிங் மருந்துகளை நிறுத்துங்கள்
- பூஞ்சை காளான் சிகிச்சை, குறைந்தது 4-6 வாரங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்
மேற்கூறிய அனைத்து தகவல்களும் ICMR ஆல் வெளியிடப்பட்டது ஆகும். மக்கள் கவனமுடன் செயல்பட்டால் எதையும் தற்காத்துக் கொள்ளலாம்.