மனிதன் உயிர் வாழ முக்கியமான ஆதாரமாக இருப்பது நீர். குடிநீர் கிடைக்காமல் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் பலரை செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் பார்த்திருப்போம். அவ்வாறு இருக்கையில்
நம் வீட்டுக் குடிநீர்க்குழாயில் எந்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடுவார்கள் என்று யாரும் கணிக்கவே முடியாது. திடீரென இரவு 2 மணிக்கு கூட தண்ணீர் திறந்து விடுவார்கள், நீண்ட நேரம் தண்ணீர் வந்திருக்கும். ஆனால் தூங்கிக் கொண்டிருந்ததால் யாருக்குமே தெரிந்திருக்காது. விடிந்த பிறகு பார்த்தால் வீட்டில் வாசல் முழுதும் தண்ணீர் தேங்கி குளம் போல் ஒரே சேறாகக் காட்சியளிக்கும்.
தண்ணீர் வருவதை கண்டுபிடித்த நமக்கு சொல்வதற்கு ஒரு எளிய வழி உள்ளது. அதாவது வீட்டுக் குடிநீர் குழாயில் எப்போது தண்ணீர் வரப்போகிறது என்றாலும், அதற்கு கால்மணி நேரத்திற்கு முன்பே காற்று ஏராளமான அழுத்தத்தோடு பைப்பில் இருந்து வெளிவரத் துவங்கும். அதனால் ஒரு பிளாஸ்டிக் “விசிலை” பைப் மூடியில் (addoptor) துளையிட்டு படத்தில் காட்டியபடி ஒட்டி விடுங்கள். வேலை முடிந்தது…..!!!
இப்போது குழாயில் குடிநீர் வந்து சேரும் முன்பாக 15 நிமிடங்கள் வெளிவரும் காற்றின் விசில் சத்தம் காதைப் பிளக்கும் (பஸ் நடத்துநர் நம் காதுக்கு அருகிலே விசில் அடிப்பதைப்போல). எந்த நேரம் குழாயில் குடிநீர் வந்தாலும் எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும்.
இதுபோன்ற குடிநீர்க்குழாய் பிரச்சினை இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.