உங்கள் குழந்தை எந்த உணவையும் சாப்பிடுவதில்லையா? | இளம் தாய்மார்களுக்கு சில டிப்ஸ்

இன்றைய இளம்தாய்மார்கள் பெரும்பாலோரின் சந்தேகங்கள் குழந்தைகளுக்கு உணவு அளிப்பது பற்றியே உள்ளது. குழந்தைகளுக்கு எப்போது திட உணவுகளை அறிமுகப்படுத்தலாம்? எந்த மாதிரியான உணவுகள் கொடுக்கலாம்? குழந்தையை எப்படி சாப்பிட வைக்கலாம் என்பது போன்ற கேள்விகள் எப்பொழுதும் கேட்கப்பட்டு கொண்டேதான் இருக்கிறது.

உணவு என்பது வெறும் வயிற்றை நிரப்புவதற்கானது மட்டும் அல்ல அது உடலுக்கும் மனதிற்கும் வலிமை தரக்கூடியது. அதிலும் முதல் இரண்டு வயது வரை குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் உணவு அவர்களது மன வளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆளுமைத் திறனையும் அளிக்கிறது. ஏன் முதல் 2 வயது வரை குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும் என்றால் முதல் இரண்டு வயது வரை குழந்தைகளின் உடல் உறுப்புகளும் மன வளர்ச்சியும் அதிக அளவில் உள்ளது. இந்த வயதில் நாம் கொடுக்கும் உணவு அவரது உடல் உறுப்புகளை வலிமை உடையதாக மாற்றுகிறது.

தாய்ப்பால் ஆறு மாதம் வரை கட்டாயம்:

தாய்ப்பால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மட்டும் இல்லாமல் மூளை மற்றும் மன வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தையின் மூளை செயல்திறன் அதிகமாக இருப்பதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.

உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இயற்கையாகவே அந்த குழந்தையின் உடலில் உடனே சேருவதற்கான ஒரு ஆதாரம் தாய்ப்பால் மட்டுமே. முதல் 6 மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் தாய்பால் கொடுப்பதனால் அந்தத் தாய்க்கும் நிறைய நன்மைகள் உள்ளன. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு மிகக் குறைவு என்று பல மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

Advertisement

திட உணவை அறிமுகப்படுத்துவது எப்படி?

முதலில் கூல் போன்ற பதத்தில் உள்ள உணவுகளை நாம் அளிக்கத் தொடங்க வேண்டும் நன்றாக மைய அரைத்த உணவுகள் ராகி கூழ், கேரட் கூழ் போன்ற உணவுகளை முதலில் அறிமுகப்படுத்தலாம் முதலில் குறைவான அளவிலேயே ஆரம்பித்து அளவினை அதிகரிக்கலாம்.

Finger foods எப்பொழுது கொடுக்கலாம்:

8 முதல் 9 மாதங்களில் குழந்தைகளுக்கு அவர்கள் கையில் எடுத்து சாப்பிடக்கூடிய உணவுகளை அளிக்கத் துவங்கலாம். நீளமாக நறுக்கிய வேகவைத்த காய்கறிகள் ரொட்டித் துண்டுகள் போன்றவற்றை finger foods ஆக குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம்.

குழந்தைகள் உணவுகளை ஷாப்பிங் செய்ய

குழந்தைகளை உணவை சாப்பிட வைக்க சில யோசனைகள்:

வற்புறுத்தாதீர்கள்

குழந்தைகளை அழுத்திப் பிடித்து உணவு கொடுப்பது, வற்புறுத்தி வாயில் திணிப்பது போன்றவற்றை எப்பொழுதும் செய்யாதீர்கள். அப்படிச் செய்வதால் அவர்களுக்கு உணவின் மீது வெறுப்பு வந்துவிடும் அதன் பிறகு அவர்களை உண்ண வைப்பது மிகுந்த சவாலான காரியமாகிவிடலாம். ஒருவேளை அவர்கள் சாப்பாடு வேண்டாம் என்றுவிட்டால் சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யுங்கள்.

Advertisement

புதிய சுவையினை அறிமுகப்படுத்துங்கள்:

ஒரே மாதிரியான உணவுகளை அளிக்காதீர்கள் பல்வேறு காய்கறிகளையும் பருப்பு வகைகளையும் அறிமுகப்படுத்துங்கள் ஒரே மாதிரியான உணவுகள் ஒருகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தும் ஆகவே அவர்களுக்கு உணவின் மீது விருப்பம் இல்லாமல் போகலாம்.
“3 days rule” என்று உள்ளது, குழந்தைகளுக்கு உணவளிக்கும் போது மூன்று நாட்களுக்கு ஒரு முறை புது சுவையை அறிமுகப்படுத்த வேண்டும். அதேபோல் ஒரு உணவினை நாம் அளிக்கும் போது அவர்களை அப்படியே உண்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க கூடாது. ஒரு குழந்தை ஒரு உணவினை 8 முறை ருசித்து பிறகுதான் அது முழுமையாக அதை ஏற்றுக் கொள்கிறதாம் ஆகவே தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

No screen time:

குழந்தைகள் உணவுகளை ஷாப்பிங் செய்ய

இது இன்றைய பல தாய்மார்கள் செய்யும் மிகப்பெரிய தவறு ஆகும் செல்போன் காட்டி உணவு ஊட்டுவது. இப்படி செய்வதால் குழந்தைகள் உணவை அப்படியே விழுங்க கற்றுக்கொள்கின்றனர்.
அப்படியே அதை வழக்கமாக்கியும் கொள்கின்றனர். இந்த பழக்கம் நாளடைவில் உடல் பருமனுக்கு வழி வகுக்கும்.

Follow 24news.in on Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் 24news.in தமிழ் இணையதள செய்திகளை உடனுக்குடன் பெற இங்கே 24news.in தமிழ் கிளிக் செய்து follow செய்யுங்கள்.

Exit mobile version