ஒ.என்.வி விருதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் – வைரமுத்து | Vairamuthu refused ONV Award

ஐந்தாவது ஒ.என்.வி இலக்கிய விருதுக்கு தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து தேர்வு செய்யப்பட்டதை மீண்டும் ஆராயப்படும் என ஒ.என்.வி அகாடமி வெள்ளிக்கிழமை அறிவித்து. இதனையடுத்து தனக்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க ஓ.என்.வி விருதை திருப்பி அளிப்பதாக வைரமுத்து அறிவித்துள்ளார். இருப்பினும், இந்த விருது வேறு கவிஞருக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

ஓ. என். வி. இலக்கிய விருது என்பது என்ன?

O. N. V. Kurup

ஓ. என். வி. இலக்கிய விருது (O. N. V. Literary Award) என்பது மலையாளக் கவிஞர் ஒற்றப்பிலாவில் நீலகண்டன் வேலு குருப் (O. N. V. Kurup) (1931–2016) நினைவாக ஓ. என். வி இலக்கிய விருது 2017ஆம் ஆண்டு முதல் ஓ. என். வி. கலாச்சார குழுமத்தினால் வழங்கப்படுகிறது. இந்த விருது ஒரு தேசிய விருது ஆகும். இதற்காக இந்தியா முழுவதும் உள்ள எழுத்தாளர்கள் இலக்கியத்திற்கான ஒட்டுமொத்த பங்களிப்புகளிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் இதுவரை, மலையாள மொழி ஆசிரியர்கள் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நினைவுப் பரிசாகச் சிலை, மேற்கோள், மற்றும் ₹ 300,000 வழங்கப்படுகிறது.

இதுவரை ஒ.என்.வி விருது பெற்றவர்கள்

என்ன நடந்தது?

ஐந்தாவது ஒ.என்.வி இலக்கிய விருதுக்கு தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து தேர்வு மீண்டும் ஆராயப்படும். இந்த தேர்வு ஒரு நடுவர் மன்றத்தால் செய்யப்பட்டது என்று ஓ.என்.வி கலாச்சார அகாடமி தெரிவித்துள்ளது. #MeToo பிரச்சாரத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவர் இந்த விருதை பெறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேரளாவில் சர்ச்சை வெடித்ததை அடுத்து, தேர்வை மறுஆய்வு செய்வதாக நடுவர் மன்றம் முடிவுக்கு வந்தனர்.

திரைப்படத் தயாரிப்பாளரும், ஓ.என்.வி கலாச்சார அகாடமியின் தலைவருமான அடூர் கோபாலகிருஷ்ணன், “ஓ.என்.வி பெயர் சர்ச்சையில் இழுக்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. விருது பெற்றவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால், அது சரியல்ல என்று நடுவர் மன்றம் உணர்ந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தேர்வை மறுஆய்வு செய்வது நடுவர் மன்றத்தின் முடிவு.” விருது தொடர்பான எந்தவொரு முடிவையும் மறுபரிசீலனை செய்யவோ அல்லது திருத்தவோ அகாடமி ஜூரியிடம் கேட்க முடியாது, ஏனெனில் இது சட்டவிரோதமானது மற்றும் தார்மீக ரீதியாக சரியானதும் அல்ல.

நடுவர் மன்றம் பல்கலைக்கழக துணைவேந்தர் அனில் வல்லத்தோல், கவிஞர்கள் அலங்கோடு லீலகிருஷ்ணன் மற்றும் பிரபா வர்மா ஆகியோர் அடங்குவர். ONV இன் பேத்தி அபர்ணா ராஜீவ், நடுவர் மன்றம் என்ன முடிவு செய்தாலும், குடும்பம் அதற்கு ஆதரவாக நிற்கும் என்றார்.

வைரமுத்து என்ன கூறினார்?

சனிக்கிழமையன்று வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், வைரமுத்து தன்னுடன் வெறுப்புணர்ச்சி கொண்ட ஒரு சிலரின் தலையீட்டால் இந்த விருது மறுபரிசீலனை செய்யப்படுவதை அறிந்ததாக தெரிவித்தார். “இது என்னையும் ஓ.என்.வி. நடுவரும் ஒரு சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்று நான் நினைக்கிறேன். எனவே, பல சர்ச்சைகளுக்கு இடையில் விருதைப் பெறுவதைத் தவிர்க்க விரும்புகிறேன்” என்றார்.

அவர் ‘மிகவும் உண்மையுள்ளவர்’ என்றும், அவரது உண்மைத்தன்மையை சோதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சேர்த்துக் கொண்ட அவர், இந்த விருதைத் திருப்பித் தருவதாகவும், அந்த விருதுக்காக வழங்க இருந்த ரூ .3 லட்சம் பரிசுத் தொகையை கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் கூறினார். “கேரள மக்கள் மற்றும் மாநில மக்கள் மீதான எனது அன்பின் அடையாளமாக, என்னுடைய சொந்த பணத்திலிருந்து, கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எனது பங்காக ரூ. 2 லட்சத்தையும் வழங்குகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

Exit mobile version