தனது குழந்தைக்கு பெயர் சூட்டினார் ஸ்ரேயா கோஷல்! பெயர் என்ன தெரியுமா?

முன்பே வா என் அன்பே வா …கண்ண காட்ட போதும் …உன்ன விட்டா யாரும் எனக்கில்ல …போன்ற மெலோடி பாடல்களை பாடியவர் தான் ஸ்ரேயா கோஷல். தமிழில் மட்டுமல்லாமல் வேறு மொழிகளிலும் பல வெற்றி பாடல்களை பாடிய இவர் இந்தியாவின் மிகவும் பிரபலமான பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல் ஆவார்.

அவர் கடந்த மே மாதம் 22 ஆம் தேதியன்று தனது ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து தனது குழந்தைக்கு “தேவ்யான் முகோபத்யயா” என்று பெயர் சூட்டி, நேற்று (2.6.2021) அவரது சமூக வலைதள பக்கங்களில் ஷ்ரேயா கோஷல் அவரின் கணவருடன் தங்களது குழந்தையை கைகளில் வைத்து அன்பை பரிமாறிய படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:

” நாங்கள் எங்களது குழந்தையை ‘தேவ்யான் முகோபத்யயா’ என்ற பெயருடன் உங்களுக்கு அறிமுகப்படுத்திகிறோம்,
அவர் பிறந்த மே 22 ஆம் தேதியன்று எங்கள் வாழ்க்கையை என்றென்றும் புதுமையாக மாற்றினார். அவர் பார்த்த அந்த முதல் பார்வையில் எங்களது இதயம் முழுவதும் ஒரு விதமான அன்பு நிறம்பியது. அதை ஒரு தாய் தந்தையாக எங்களால் மட்டுமே உணர முடியும். ‘இது ஒரு தூய கட்டுப்பாடற்ற அதிகப்படியான அன்பு’ “.

இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர், அவருடைய கணவர் மற்றும் குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது வரை இந்த புகைப்படம் 12 லட்சம் லைக்ஸ் களை பெற்றுள்ளது. திரைப்பட துறையினர்களும் ரசிகர்களும் ஸ்ரேயா கோஷல் தம்பதியினருக்கு வாழ்த்துக்களை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.

Exit mobile version