மழை கொட்டுவதால் தடைபடும் ICC WTC final 2021 | ICC மீது கோபத்தை கொட்டும் ரசிகர்கள்

தற்போது நடைபெற்று வரும் ICC நடத்தும் உலக டெஸ்ட் சாம்ப்பியன்சிப் இறுதிப் போட்டி (WTC final 2021) மழை காரணமாக ஆட்டம் தடைபடுவதும் மீண்டும் நடப்பதுமாக தொடர்கிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து க்கு இடையில் நடக்கும் போட்டி என்றாலும் உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை தற்போது #WTC final 2021 ல் உள்ளது.

இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளின் முடிவுகளை வைத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள். இவ்வளவு பெரிய தொடரின் இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்படுவது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

IND vs NZ WTC final 2021 முதல் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது. முதல் நாளில் ஒரு ஓவர் கூட வீசப்படவில்லை. பிறகு இரண்டாவது நாள் தொடங்கப்பட்ட ஆட்டத்தில் இந்தியா 64.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

கோலி 44 ரன்கள் ரஹானே 29 ரன்களுடனும் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 92.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்சை முடித்துக்கொண்டது. பிறகு நியூசிலாந்து 49 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 101 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் மீண்டும் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. இவ்வாறாக மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

நான்காவது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஐந்தாவது நாள் ஆட்டமும் மழையால் தடைபட்டால் போட்டி “டிரா” என அறிவிக்கப்படும். இதனால் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். ICC நடத்தும் இவ்வளவு பெரிய போட்டி மழையால் தடைபடுவது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

Read also: மழையால் ஆட்டம் ரத்து ஆனால் என்ன ஆகும்?

Exit mobile version