ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் அரை சம்பளம் – ஆந்திர அரசு: தமிழ்நாட்டில் எப்படி?

நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் செயல்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. இருப்பினும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வேலை எதுவும் செய்யாமலேயே முழு ஊதியம் பெற்று வருகின்றனர். இதை கவனத்தில் கொண்ட ஆந்திர அரசு ஆசிரியர்களுக்கு அரை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ஆசிரியர்களுக்கு மட்டும் பொருந்தும். மற்ற கள பணியாளர்களாக உள்ள காவலர்கள், மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

ஆந்திர முதல்வர் எடுத்த இந்த அதிரடி முடிவை சுட்டிக் காட்டி பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் தமிழக பள்ளி ஆசிரியருக்கும் ஊதியம் குறைக்கப்படுமா என்று கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இதுபற்றி முதல்வரிடம் கலந்து ஆலோசித்து பிறகு உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார்.

Exit mobile version