கருப்பு பூஞ்சை தொற்றால் ராஜஸ்தானில் 100 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அம்மாநில அரசு கறுப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து இருக்கிறது. தொற்று நோயாக அறிவித்ததால் அதனை எளிதில் அடையாளம் கண்டு தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நீரழிவு நோய் இருந்து கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்கள் அல்லது கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் ஆகும்.
கொரோனா மற்றும் கறுப்பு பூஞ்சை நோய் ஆகிய இரண்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்க முடிவு செய்து 100 படுக்கைகள் கொண்ட தனி சிகிச்சை பிரிவை ராஜஸ்தான் மாநில அரசு தயார் நிலையில் வைத்துள்ளது.
இவ்வாறு அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.