+2 பொதுத் தேர்வு கட்டாயம் நடக்கும்! ஆனால் எப்பொழுது? – முக்கிய தகவல் உள்ளே

கொரோனாவும் பொதுத்தேர்வும்:

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பரவத்துவங்கிய கொரோனா (COVID-19) பெருந்தொற்று இன்னும் தன் கோரதாண்டவத்தை சற்றும் குறைக்காமல் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. தற்போது வரை பள்ளிகள் முழுவதுமாக திறக்காத சூழ்நிலையில் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மார்ச் மாதம் நடக்க வேண்டிய பொதுத்தேர்வு மே மாதம் நடக்கும் என்று தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவிவருவதால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு தேதி தேர்வு நடைபெறும் 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.

ஆன்லைன் வகுப்புகள்:

கொரோனாவால் வகுப்பறைக் கல்வி நடைபெறாத சூழ்நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கட்டாயம் தேர்வு நடக்கும்:

பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனைக்குபின் செய்தியாளர்களிடம் கூறியது: +2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கல்லூரிகளில் சேர்வதுக்கு மிக முக்கியம். ஒருவேளை தற்போது பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் கல்லூரிகள் நுழைவுத்தேர்வு வைத்து மாணவர் சேர்கை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இது மாணவர்களை மிகவும் பாதிக்கும். பொதுத்தேர்வு நடந்தால் வரும் பாதிப்புகளைவிட தேர்வு நடத்தபடாமல் விட்டால் வரும் பாதிப்புகள் அதிகம். சில காரணங்களால் +2 பொதுத்தேர்வு தள்ளி போகுமே தவிர கட்டாயம் ரத்து செய்யப்படாது. அதனால் மாணவர்கள் சந்தேக மனநிலையை தவிர்த்து தேர்வுக்கு தயாராகும்படி அறிவுறுத்தியுள்ளார்.

எப்பொழுது?

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 32,000ஐ நெருங்கிய நிலையில் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து அதை கட்டுபடுத்த போராடிக்கொண்டு இருக்கிறார்கள். சுகாதாரத்துறை தரும் அறிவுறுத்தலின் அடிப்படையில் கொரோனா பாதிப்பும் பரவல் விகிதமும் குறைந்தவுடன் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மாணவர்கள் தற்போது அதிக நாட்கள் வீட்டில் இருப்பதால் அவர்களை தேர்வு எழுதும் மனநிலைக்கு கொண்டுவர வேண்டும். அதனால் தேர்வுக்கு முன்பு கட்டாயம் 15 நாட்களாவது வகுப்புகள் நடத்திய பின்பு தேர்வுகள் நடத்த வேண்டும் என்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Exit mobile version