தமிழ்த் திரைதுறையில் பணியாற்றி வரும் திரு வைரமுத்து அவர்கள் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் நாவலாசிரியர் ஆவார். இவர் சுமார் ஆறாயிரம் பாடல்கள் வரை எழுதியுள்ளார். ஏழு முறை இந்திய அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினையும் பெற்றுள்ளார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு கவிதை தொகுப்புகளையும் கட்டுரைகள் நாவல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். அவரது குறிப்பிடத்தகுந்த நாவல்களாவன கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் மற்றும் மூன்றாம் உலகப் போர்.
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் நாவல் சிறந்த நாவலுக்கான “சாகித்ய அகாடமி” விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கலைமாமணி பத்மவிபூஷன் போன்ற விருதுகளை வாங்கிய பெருமைக்குரியவர் திரு வைரமுத்து அவர்கள். இவரது புதிய பிரம்மாண்ட முயற்சியே. ” நாட்படு தேறல்” என்னும் பாடல்களின் தொகுப்பு ஆகும்.
நாட்படு தேறல்
கவிஞர் வைரமுத்து நூறு பாடல்களை ” நாட்படு தேறல்” என்ற தலைப்பின் கீழ் வெளியிட உள்ளார் . ஒவ்வொரு பாடல்களுக்கான தனித்தனி இசையமைப்பாளர்கள் பாடகர்கள் நடிகர்கள் இயக்குனர்கள் என ஒரு பிரம்மாண்ட முயற்சியாக இப்பாடல்களை வெளிவர உள்ளன. அதாவது 100 பாடல்கள், 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 இயக்குனர்கள் இந்த முயற்சியில் பங்கேற்றுள்ளனர்.
முற்றிலும் புதிய முயற்சியான நாட்படு தேறல் தொகுப்பின் முதல் பாடலான “நாக்கு செவந்தவரே” என்னும் பாடல் ஏப்ரல் 18ஆம் தேதி கலைஞர் டிவியில் வெளியிடப்பட்டது .அதன் பிறகு வாரம் ஒரு பாடல் என்ற விதத்தில் இதுவரை 9 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
“நாட்படு தேறல்” என்பதன் அர்த்தத்தை தெரிந்து கொள்வோம், பனை மரத்திலிருந்து இறக்கப்படும் ” கள் ” என்பதே தேறல் என்பதன் பொருளாகும் . அவ்வாறு எடுக்கப்படும் கள்ளின் சுவையை கூட்டுவதற்காக அவற்றை மண்ணுக்கடியில் புதைத்து வைப்பர் .அவ்வாறு சுவையூட்டப்பட்ட கள்ளே “நாட்படு தேறல்” என்றழைக்கப்படுகிறது.
இதனைப் போலவே இந்த பாடல்களும் சுவையானதாகவே இருக்கும்.
Follow 24news.in on Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் 24news.in தமிழ் இணையதள செய்திகளை உடனுக்குடன் பெற இங்கே 24news.in தமிழ் கிளிக் செய்து follow செய்யுங்கள்.