Advertisement
அரசியல்

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு ஆறு சிறப்பு அறிவிப்புகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சிறப்பு அறிவிப்புகளை அறிவித்துள்ளது. மொத்தமாக ஆறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

என்னென்ன அறிவிப்புகள்?

Advertisement

1. தென் சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ. 250 கோடி செலவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.

2. சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய 2 கலைஞர் நினைவு நூலகம் ரூ. 70 கோடி செலவில் அமைக்கப்படும்.

3. கலை மாமணி விருது வழங்கப்படுவது போல், தமிழ் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் ‘இலக்கிய மாமணி’ விருது வழங்கப்படும்.

4. உயர் விருதுகள் பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக இலவச வீடு வழங்கப்படும்.

5. திருவாரூர் மாவட்டத்தில் ரூ 24.3 கோடி மதிப்பீட்டில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். மேலும், உலர்விக்கும் 50 களங்களும், 4 உலர்விப்பான்களும் ஏற்படுத்தப்படும்.

6. நகரப்புற அரசு பேருந்துகளில் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பயணச் சலுகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.