தமிழகத்தில் நாளை மே 15 முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வந்தாலும், பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, குறைவதாக தெரியவில்லை. இதற்கு மக்களின் அலட்சியமே காரணம். இதையடுத்து நாளை மே 15 முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
அதில் தெரிவிக்கபட்டவை :
- நாளை முதல் டீக்கடைகள் இயங்க அனுமதியில்லை.
- மே 17 முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டம் வெளியேயும் பயணிக்க இ-பதிவு கட்டாயம்.
நேரம் குறைப்பு
- மளிகை, காய்கறி மற்றம் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்க அனுமதி.
- காய், கறி, பூ மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் இயங்க அனுமதி இல்லை.
- அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டிற்கு அருகே உள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும்.
- ஏ.டி.எம்.கள், பெட்ரோல் பங்குகள் எப்போதும் போல் செயல்படும்.
- ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யும் மளிகை பொருட்கள், காய்,கறி விற்பனைக்கு காலை 10 மணி வரை அனுமதி.
- ஆங்கில, நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்படும்.
- மருத்துவ தேவைகளுக்காக பயணம் மேற்கொண்டாலும் இ-பதிவு கட்டாயம்.
- திருமணம், இறப்பு போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ-பதிவு கட்டாயம்.
- பொருட்கள் வாங்க வீட்டிலிருந்து அதிக தொலைவிற்கு செல்ல அனுமதியில்லை. இவ்வாறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- நாளை மறுநாள் 16-ம் தேதி மற்றும் 23-ம் தேதி ஞாயிற்றுகிழமைகளில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
- மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோல அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணையுங்கள் https://t.me/Tamil24Newsin