தோனி ‘லெஜண்ட்’, சச்சின் ‘கடவுள்’ அப்படினா விராட் கோலி? – மனம் திறக்கும் சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ‘என்னிடம் எதையும் கேளுங்கள்’ என்ற நேரலை கேள்வி நேரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதைத் தொடர்ந்து ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டனர். இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியைப் பற்றி ஒரு வார்த்தையில் கூறும்படி கேட்டபோது, அவர் ‘லெஜண்ட்’ என்று கூறினார்.
அதன்பிறகு சூர்யகுமார் யாதவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. விராட் கோலியைப் பற்றி ஒரு வார்த்தை கேட்டதற்கு, சூர்யகுமார் ‘இன்ஸ்பிரேஷன்’ என்று பதிலளித்தார்.
தனது ஐபிஎல் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணியின் சக வீரர் பொல்லார்ட் ஆகியோரை ஒரே வார்த்தையில் விவரிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டார். அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா ‘ஹிட்மேன்’, கீரோன் பொல்லார்ட் ‘LLORD’. சச்சின் டெண்டுல்கரை ஒரே வார்த்தையில் விவரிக்கக் கேட்டபோது அவர் ‘கடவுள்’ என்றார்.