இந்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று கூறுவது குற்றம் ஒன்றுமில்லை! | சட்டப்பேரவையில் விளக்கம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

இதுவரை மத்திய அரசு என்று அழைத்து பழக்கப்பட்ட மக்கள் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றதலிருந்து ‘ஒன்றிய அரசு’ என்று கூறுவதை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். தமிழ்நாடு மக்கள் மட்டுமல்லாது மற்ற மாநில மக்களும் இதே குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் ஸ்டாலின் அவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா #UnionOfStates என்றே வரையறுக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களால் ஆனதுதான் இந்தியா.

ஒன்றியம் என்ற சொல்லில்தான் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதனால்தான் பயன்படுத்துகிறோம், பயன்படுத்துவோம், பயன்படுத்திக்கொண்டே இருப்போம்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version