ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி (Sputnik V) கொரோனா தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் தொடக்கம்
ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் ஆர்.டி.ஐ.எஃப், பனசியா பயோடெக் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. ஸ்பட்னிக் வி என்பது இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரால் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்ட மூன்றாவது தடுப்பூசி ஆகும்.
ஏப்ரல் 12, 2021 அன்று அவசரகால பயன்பாட்டு அங்கீகார நடைமுறையின் கீழ் ஸ்புட்னிக் வி இந்தியாவில் பதிவு செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் அறிவித்தபடி, ஆர்.டி.ஐ.எஃப் மற்றும் பனேசியா ஆகியவை ஸ்பட்னிக் வி தடுப்பூசியை ஆண்டுக்கு 10 கோடி டோஸ் தயாரிக்க ஒப்புக் கொண்டுள்ளன.
2020 டிசம்பர் 5 முதல் 2021 மார்ச் 31 வரை ஸ்புட்னிக் V கொரோனா வைரஸ் தொற்று வீதம் குறித்த தரவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் ஸ்பூட்னிக் V இன் செயல்திறன் 97.6 சதவீதமாகும்.
ஸ்புட்னிக் வி மூன்றாவது COVID-19 தடுப்பூசி ஆகும். இது இந்தியா முழுவதும் பயனாளிகளுக்கு வழங்கப்படும். புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் லிமிடெட் முறையே தயாரித்த கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகியவற்றைப் பயன்படுத்தி நாடு இதுவரை தனது தடுப்பூசி இயக்கத்தை நடத்திக்கொண்டு இருக்கிறது. தற்போது இந்த மூன்றாவது தடுப்பூசி கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வர உதவியாக இருக்கும்.